- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அனுஷம்:
சனியை நட்சத்திரநாதனாகக் கொண்ட அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
இந்த ஆண்டு மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சைத் தவிர்ப்பது நல்லது.
லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு நிதானமாகப் பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும்.
கலைத்துறையினருக்கு மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மன நிம்மதி பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய கவலை உண்டாகும். தடையைத் தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.
பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு வீண் மனக்கலக்கம் அகலும்.
பரிகாரம்: சித்தர்களை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.
மதிப்பெண்கள்: 72% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
******************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago