2022 எப்படி இருக்கும்? விசாக நட்சத்திர அன்பர்களே! எதிர்ப்பு விலகும்;பண வரவு கூடும்; தொழிலில் முன்னேற்றம்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


விசாகம்:


குருவை நட்சத்திரநாதனாகக் கொண்ட விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!


இந்த ஆண்டு எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரியத் தடைகள், கூடுதல் செலவு உண்டு என்றாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதுர்யம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும்.

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். பெண்களுக்கு புத்திசாதுர்யம் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு மனத்தடுமாற்றம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

மதிப்பெண்கள்: 65% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
***********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்