2022 எப்படி இருக்கும்? உத்திரம் நட்சத்திர அன்பர்களே! யோகங்கள் கூடும்;தடைகள் அகலும்; உத்தியோகத்தில் மேன்மை!

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


உத்திரம்:


சூரியனை நட்சத்திரநாதனாகக் கொண்ட உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!


இந்த ஆண்டு பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதுர்யத்தால் எந்தத் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்சினையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்கச் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும். அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும். பெண்கள் எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: ஐயப்பனை வணங்க எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

மதிப்பெண்கள்: 74% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
*****************************************

2022 எப்படி இருக்கும்? உத்திரம் நட்சத்திர அன்பர்களே! யோகங்கள் கூடும்;தடைகள் அகலும்; உத்தியோகத்தில் மேன்மை!


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்