மகர ராசி அன்பர்களே! ஜனவரி 2022 பலன்கள்;திறமை வெளிப்படும்; பண வரவு; ஆடம்பரச் செலவு வேண்டாம்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மகரம்


(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


கிரகநிலை:


ராசியில் புதன், சுக்(வ), சனி - தனவாக்கு ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - விரைய ஸ்தானத்தில் சூர்யன் என கிரக நிலை இருக்கிறது.

பலன்கள்:


மகர ராசியினரே நீங்கள் இளகிய மனம் கொண்டவர்கள். இந்த மாதம் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரிய தடை தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள்.
மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நல்லது.

உத்திராடம்:


இந்த மாதம் குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல்திறன் அதிகரிக்கும். சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சனை வரலாம்.


திருவோணம்:


இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணத்திற்கு நல்ல வரனாக அமையும். தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும்.


அவிட்டம்:


இந்த மாதம் உங்கள் வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். முதலீடு செய்வதற்குண்டான பணவசதி வந்து சேரும். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாக குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும்.


பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15
*******

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்