- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரகநிலை:
ராசியில் செவ்வாய், கேது - தனவாக்கு ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் புதன், சுக்(வ), சனி - சுக ஸ்தானத்தில் குரு - சப்தம ஸ்தானத்தில் ராகு என கிரக நிலை இருக்கிறது.
» துலாம் ராசி அன்பர்களே! ஜனவரி 2022 பலன்கள்; பிரச்சினைகள் குறையும்; கூடுதல் உழைப்பு; பண வரவு கூடும்!
» கன்னி ராசி அன்பர்களே! ஜனவரி 2022 பலன்கள்; பண வரவு கூடும்; வீண் செலவு உண்டு; நல்ல வேலை கிடைக்கும்!
பலன்கள்:
விருச்சிக ராசியினரே!
நீங்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பதில் வல்லவர்கள். இந்த மாதம் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யத் தயங்கும் வேலையைச் செய்து முடித்து பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களைச் செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்களைக் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தைச் சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.
கலைத்துறையினருக்கு தனாதிபதி குருவின் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும்.
அரசியல்துறையினருக்கு பூர்வீகச் சொத்துகள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
விசாகம்:
இந்த மாதம் உங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டு உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள். எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் நீங்கள் வேலையை விடுவது நன்மையில்லை. உப தொழில் செய்யும் விருப்பமுடையவர்கள் தாராளமாக இப்போது ஆரம்பிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க நேரிடும்.
அனுஷம்:
இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சிறந்த வேலை கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பொதுவில் நன்மையே நடக்கும்.
கேட்டை:
இந்த மாதம் எதிலும் நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் திறமை குறையும். அடுத்தவர் பிரச்சினை தீர்க்க உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் உழைத்த அளவுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். பொறுமையாக உங்கள் கடமைகளைச் சரியாக செய்யவும். உடன் பணிபுரிவோரால் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.
பரிகாரம்: வள்ளி தேவசேனா சமேதராக உள்ள முருகப் பெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10
*******************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
58 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago