துலாம், விருச்சிகம், தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! ஜனவரி 5ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:
ராசியில் சந்திரன் - தன ஸ்தானத்தில் கேது, செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் சனி, புதன், சுக்ரன் (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.

பலன்கள்:

பிறரின் நட்பை பயன்படுத்தி எதையும் செய்து முடிக்கும் துலாம் ராசி அன்பர்களே!

உங்களிடம் ஆளக்கூடிய திறமை இருக்கும். இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும். குறிக்கோள் நிறைவேறும்.
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். வீண்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது. சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் கோதுமை தூளை காகத்திற்கு வைக்க பிரச்சினைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.
*******************


விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)


கிரகநிலை:
ராசியில் கேது, செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, புதன், சுக்ரன் (வ) - சுக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலவரம் உள்ளது.

பலன்கள்:

வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களை அனுபவமாக எடுத்துக் கொள்ளும் திறமை உடைய விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளை வணங்கி புளியோதரை விநியோகம் வழங்க மனத்தெளிவு உண்டாகும். அறிவுத் திறன் அதிகரிக்கும்.
**************************


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)


கிரகநிலை:
ராசியில் சூர்யன் - தன ஸ்தானத்தில் சனி, புதன், சுக்ரன் (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - ரண் ருண ரோக ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது, செவ்வாய் என கிரக நிலவரம் உள்ளது.

பலன்கள்:

வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடவும், உழைக்கவும் தயங்காத தனுசு ராசி அன்பர்களே!

இந்த வாரம் வீண் அலைச்சல் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும்.

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும்.

அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணம் வரும் வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும்.

மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: குரு பகவானை வணங்கி வர செல்வம் சேரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

மேலும்