- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சந்திரன் -தன ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் கேது, செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சனி, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலவரம் உள்ளது.
பலன்கள்:
» பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; இந்த வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 19ம் தேதி வரை
» திருவோணம், அவிட்டம், சதயம்; இந்த வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 19ம் தேதி வரை
எடுத்துக் கொண்ட காரியத்தில் தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டு ஆர்வமுடன் லட்சிய நோக்குடன் தக்க விதத்தில் செயலாற்றி சாதனை புரிந்து வாழ்க்கை நடத்தும் அமைதியான நிதான உள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே !
நீங்கள் எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கும் வல்லவர். இந்த வாரம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும்.
கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் சனியின் நற்செயல்கள் இருக்கும். தந்தை வழி சார்ந்த உறவினர்களால் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டு பெற வருவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்கள் இதுவரை இருந்த ஆடம்பரச் செலவினங்களை தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்க்கிக்காக சுபமங்கலச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.
தொழிலதிபர்கள் ஊழியர்களின் மிகுந்த ஒத்துழைப்பைப் பெற்று உற்பத்தியிலும் விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள். தொழில் மேன்மைக்காக நிறுவன இட விஸ்தரிப்பு, புதிய கிளை தொடக்கம் போன்ற நற்பலன்களைப் பெறுவார்கள்.
பெண்கள் அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும்.
மாணவர்கள் தகுதியான பணிகளைச் செய்யும் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் கெயல்பாடுகள் இருக்கும்.
பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வரவும். சனிக்கிழமை தோறும் முருகப் பெருமானுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.
~~~~~~~~~~~~~~~~
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
கிரகநிலை:
ராசியில் ராகு - களத்திர ஸ்தானத்தில் கேது, செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலவரம் உள்ளது.
பலன்கள்:
கனிவே பெருமை என்பதற்கேற்ப கவர்ச்சிகரமான தோற்றமும் கனிவான பேச்சும் தெளிவான சிந்தனையும் கொண்டு அனைவராலும் விரும்பப்படும் ரிஷப ராசி அன்பர்களே!
மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைத்தாலும் வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கப்பெறும். கண்டகச்சனி நடப்பதால் புகைப்பிடித்தல், மதுகுடித்தல் போன்ற நச்சுத்தன்மை பொருந்தியவற்றை உபயோகப்படுத்துல் கூடாது. தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் செயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.
உத்தியோகஸ்தர்கள் துறை சார்ந்த பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்திருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்.
வியாபாரிகள் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். இருப்பினும் உடல்நிலையில் கவனமுடன் இருக்க வேண்டி வரும்.
மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள். தேவையான பொருளாதாரம் கிடைக்கப்பெற்று தகுதியான செலவுகளை செய்து நற்பெயர் பெறுவீர்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சாத்தி வழிபடவும்
~~~~~~~~~~~~~
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது, செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் புதன், சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.
பலன்கள்:
சாமர்த்திய மிதுனம் என்பதற்கேற்ப நன்றாக சிந்தித்து நல்ல யோசனைகளால் மற்றவர் மனம் நோகாமல் சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கும் ஆற்றலும் வாழ்க்கையில் வளமும் நலமும் அதிகம் பெறும் மிதுன ராசி அன்பர்களே!
நீங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையான செயல்பாட்டுக்கு வந்து விடும். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழு காரணமாக இருக்கும்.
கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூலப் பயன்கள் உண்டாகும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப்படுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
தொழிலதிபர்கள் புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள்.
பெண்கள் நிறைவான வகையில் சத்தான பாக்கியம் அடையலாம். அழகு சார்ந்த பொருட்களை உருவாக்கும் பெண்கள் நிறைய வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள்.
மாணவர்கள் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர். மாணவர்கள் தகுந்த சமயத்தில் நுணுக்கங்களை அறிந்து நற்பெயர் அடைவார்கள். நண்பர்களும் உதவி செய்வார்கள்.
பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு தேங்காய் நீராஞ்சன தீபம் ஏற்றவும்.
~~~~~~~~~~~~~~
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago