- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம்:
கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் கேது, சூர்யன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் சனி, சுக்ரன், சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.
பலன்கள்:
என் கடமை பணி செய்து கிடப்பதே என்பது போல பிரதிபலன் எதிர்பார்க்காமல் காரியங்களை செய்யும் குணமுடைய கடக ராசி அன்பர்களே!
இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரியத் தடைகள் கூடுதல் செலவு உண்டானாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதுர்யம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகனயோகம் உண்டாகும்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.
பெண்களுக்கு புத்திசாதுர்யம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சினைகள் குறையும்.
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
பரிகாரம்: திருக்கடையூர் அபிராமி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
********************************
சிம்மம்:
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது, சூர்யன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, சுக்ரன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.
பலன்கள்:
எதையும் தாங்கும் இதயம் என்பதற்கேற்றார் போல் எதைக்கண்டும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய சிம்ம ராசி அன்பர்களே!
இந்த வாரம் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சைத் தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.
குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு நிதானமாகப் பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனக்கவலை ஏற்படலாம்.
மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய கவலை உண்டாகும். தடையைத் தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.
பரிகாரம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.
**********************************
கன்னி:
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது, சூர்யன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி, சுக்ரன், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.
பலன்கள்:
வேகத்திலும் விவேகம் தேவை என்பதை உணர்ந்து வேகமாக எதைச் செய்தாலும் அதில் உள்ள நன்மை தீமை அறிந்து செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!
இந்த வாரம் பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.
பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
பரிகாரம்: திருநீர்மலை நீலமுகில் வண்ண பெருமாளை அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்பப் பிரச்சினை தீரும்.
***********************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago