அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - நவம்பர்  22 முதல் 28ம் தேதி வரை 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அஸ்தம் -


மன நிறைவை தரக்கூடிய வாரமாக இருக்கும். கடந்த சில வாரங்களாக இருந்து வந்த பிரச்சினைகள் இனி இருக்காது. குடும்பப் பிரச்சினைகள் சுமுகமாக முடிவுக்கு வரும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள். தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். இதுவரை தேங்கி நின்ற பொருட்களெல்லாம் விரைவாக விற்பனையாகும். வியாபார நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும். அதன்மூலம் லாபமும் உண்டாகும். நண்பர்களால் புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும். பெண்களுக்கு மன நிம்மதி ஏற்படும் வகையில் சுப விசேஷங்கள் நடைபெறும். இளைய சகோதரர் அல்லது சகோதரிக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனமும், அக்கறையும் எடுத்துக்கொள்ள வேண்டும். கலைஞர்களுக்கு இதுவரை பேசிவந்த புதிய வாய்ப்புகள் ஒப்பந்தமாக மாறும்.

இந்த வாரம் -

திங்கள் -
சிறப்பான வாய்ப்புகள் தேடிவரும். அதிகப்படியான நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் அல்லது வெளி நாட்டில் இருக்கும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளுக்காக செலவுகள் செய்ய வேண்டியது வரும்.

செவ்வாய் -
சுறுசுறுப்பாக செயலாற்றி அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கக் கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு ஏற்படும்படி இருக்கும். சக ஊழியர்களோடு இணைந்து பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

புதன் -
திட்டமிடாத காரியங்களிலும் எளிதான வெற்றி கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் உண்டாகும். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் இரட்டிப்பாக இருக்கும். மன மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

வியாழன் -
சரியாக திட்டமிட்டு எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டும், அவசரமாக செய்தால் பின்னடைவை சந்திக்க வேண்டியது வரும். கடுமையான போராட்டத்திற்கு பின்னே ஒரு சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். பயணங்களை தவிர்ப்பது நல்லது, கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

வெள்ளி -
மனமகிழ்ச்சி ஏற்படும் நாள். அலுவலகப் பணிகளில் ஏற்பட்டிருந்த குறைகளை இன்று சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொத்துப் பிரச்சினைகள் பேசித் தீர்க்க வாய்ப்பு உண்டாகும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆதாயம் தரக்கூடிய வியாபாரம் ஒன்று முடிவாகும். நண்பர்களிடம் கொடுத்திருந்த பணம் இன்று திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

சனி -
வரவும் செலவும் சமமாக இருக்கக்கூடிய நாள். அத்தியாவசிய செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. வாகனங்களை சீர்படுத்த செலவு செய்ய வேண்டியது வரும். தொழில் செய்யும் இடத்திலும் வியாபார ஸ்தலத்திலும் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியது வரும்.

ஞாயிறு -
உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை செய்து முடிப்பீர்கள் பணவரவு தாராளமாக இருக்கும் நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும் வியாபார பேச்சுவார்த்தைகள் மனநிறைவைத் தரும் சுபகாரிய விஷயங்கள் பற்றிய தகவல் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும். குடும்பத்தில் மூத்தவர் ஒருவரால் தம்பதியர்கள் பிரச்சனை தீரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சித்தர் பெருமக்கள், மகான்கள் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*****

சித்திரை -


தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகக் கூடிய வாரம். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சலசலப்புகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த வருத்தங்கள் தீரும். குடும்பத்தில் திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் உறுதியாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் நடக்கும். அலுவலக பணிகளில் மனநிறைவு ஏற்படும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக விலகும், சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத நல்வாய்ப்புகள் கிடைக்கும். ஆதாயம் தரக்கூடிய வியாபாரம் ஒன்று முடிவாகும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலுக்கு தேவையான முதலீடுகள் அல்லது வங்கிக் கடன் கிடைக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும்.

செவ்வாய் -
நெருக்கமான நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சுப விசேஷங்கள் பற்றிய தகவல் உறுதியாகும். தொலைபேசி வழித் தகவல் மனம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

புதன் -
குடும்பத்தினர் எதிர்காலம் பற்றிய ஆலோசனைகளைச் செய்வீர்கள். சுயதொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனை தோன்றும், அது தொடர்பான முயற்சிகளில் இறங்குவீர்கள், தேவையானவர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள். உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகக் கூடிய நாளாக இருக்கும்.

வியாழன் -
எதிர்பாராத வருமானங்களால் திக்குமுக்காடச் செய்யக்கூடிய நாளாக இருக்கும். தொழிலிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபம் கிடைக்கும். புதிய தொழில் அல்லது வியாபார வாய்ப்புகளும் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.

வெள்ளி -
நிதானமாக செயல்பட்டு வேலைகளை செய்து முடிக்க வேண்டிய நாள். அலுவலகப் பணிகளில் எதிர்பாராத அழுத்தங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிப்பது நல்லது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு வித மன அழுத்தம் ஏற்பட்டு விலகும்.

சனி -
செயல்களில் வேகம் எடுக்கும் நாள். தாமதப்பட்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள், முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை மாற்றம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான தகவல் கிடைக்கும்.

ஞாயிறு -
குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். வீட்டு பராமரிப்பு செலவுகளும் உண்டாகும். வியாபாரத்தில் இயல்பான நிலையே இருக்கும். இனி செய்யவேண்டிய வேலைகளை பற்றிய வரைவுத் திட்டம் போடுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை அம்மன் வழிபாடு செய்யுங்கள். அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
****************


சுவாதி -


மனக் கவலைகள் தீரும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற வருமானமும் கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் உறுதியாகும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்துக்கொண்ட பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். அலுவலக பணியின் காரணமாக தொலைதூர பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும் அல்லது வேறு கிளைக்கு மாறுவது தொடர்பான தகவல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த தடைகள் முற்றிலுமாக அகலும். தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் செய்யும் இடத்தை அல்லது வியாபார இடத்தை மாற்றுவது, விரிவுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இயல்பான நிலையே இருக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையை கையாள்வது நல்லது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது.

செவ்வாய் -
தேவையான உதவிகள் தேடி வரக்கூடிய நாள் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். எதிர்பாராத பணவரவு ஒரு சிலருக்கு கிடைக்கும். வியாபாரத்தில் மிகச்சிறந்த முன்னேற்றமும் லாபமும் உண்டாகும்.

புதன் -
சிறப்பான பலன்கள் நடைபெறக்கூடிய நாள். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். வியாபாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். பெண்களுக்கு சுபகாரியம் தொடர்பான தகவல் மனதிற்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

வியாழன் -
சரியாக திட்டமிட்டு அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். அலுவலக பணிகளில் மனநிறைவு ஏற்படும் படியாக இருக்கும். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். நீண்டநாளாக முடிக்காமல் இருந்த வேலையை இன்று செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். வியாபார வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். பணத் தேவைகள் சரியான நேரத்திற்கு கிடைக்கும்.

வெள்ளி -
திட்டமிட்ட காரியங்களும் திட்டமிடாத காரியங்களும் வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். எதிர்பாராத பணவரவு இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான அரசு உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் ஒருசிலருக்கு நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.

சனி -
எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்பட வேண்டும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான சந்திப்புகள் ஏதும் இருந்தால் தள்ளி வைத்து விடுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். அக்கம்பக்கத்தினருடன் வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

ஞாயிறு -
தாமதப்பட்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சுப விசேஷங்கள் முடிவாகும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
கருடாழ்வார் வழிபாடு செய்வது நன்மையை தரும். விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நன்மைகளை அதிகப்படுத்தித் தரும்.
******

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்