திருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; நவம்பர் 21ம் தேதி வரை

By செய்திப்பிரிவு


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


திருவோணம் -


தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் வாரம். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்த குழப்பமான நிலை மாறும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்களால் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும், சகோதர ஒற்றுமை ஏற்படும். அலுவலகப் பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக பெறுவார்கள். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும், தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் சேதி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கல்விக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கக் கூடிய நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் சிறப்பாக பணிகளைச் செய்து பாராட்டு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இருமடங்காக கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நாள்.

செவ்வாய் -
தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வேலை தொடர்பாக எதிர்பார்த்த பதவி உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்..

புதன் -
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பழுதடைந்த பொருட்களை மீண்டும் புதுப்பித்தல் போன்றவற்றை செய்வீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வியாழன் -
வேலை மாற்றம், வாகன மாற்றம் போன்ற எண்ணம் தோன்றும். குடும்ப நலன் கருதி ஒரு சில நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

வெள்ளி -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் அல்லது வியாபார முயற்சிகளில் ஈடுபடுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் கிடைக்கும்.

சனி -
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானமாக இருக்க வேண்டும்.

ஞாயிறு -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை இன்று பேசி தீர்ப்பதற்கு வழி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ முருக வழிபாடு செய்யுங்கள். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************

அவிட்டம் -


எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவுக்கு வரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளிடம் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் ஒற்றுமை ஏற்படும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை பேசித் தீர்க்க வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும். தொழிலில் கணிசமான முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் கூடி வரும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பங்கு வர்த்தகத் தொழிலில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும்படியான ஏற்றம் இருக்கும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். சகோதரர்களிடம் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

செவ்வாய் -
பலரும் உங்கள் உதவியை எதிர்பார்ப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வரவும், வரவுக்கு ஏற்ற செலவும் இருக்கும். குறிப்பிடத்தக்க அளவுக்கு செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வது நல்லது.

புதன் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். சிறிய அளவிலான உடல் நல பாதிப்பு ஏற்படும். அலுவலகப் பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். ஒரு சிலருக்கு முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
மனக் குழப்பங்களில் இருந்து வெளிவருவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பணம் பல வழிகளிலும் வரும். அலுவலகப் பணிகளை சிறப்பாக முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலில் தேவையான உதவிகள் கிடைக்கும். குறிப்பாக நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த ஒப்பந்தங்கள் இப்போது கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும். பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். அலுவலகத்தில் சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். வியாபார ரீதியாகவும், அல்லது தொழில் ரீதியாகவும் பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம்.

சனி -
கடன் தொடர்பான பிரச்சினை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உத்தியோக ரீதியிலான சலுகைகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

ஞாயிறு -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை பேசி முடிப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மஹாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
***************


சதயம் -


எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு இந்த வாரம் அதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் வியாபாரம் ஆகும். வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களோடு இணைந்து வியாபாரம் செய்யும் வாய்ப்புகளும் ஒரு சிலருக்குக் கிடைக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். சுயதொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு இப்பொழுது சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமணமாகி புத்திர பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் உறுதி ஆகும். மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கணிசமான லாபம் ஏற்படும். புதிதாக தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த தொழில் ஒப்பந்தம் நிறைவேறும்.

செவ்வாய் -
தேவையற்ற பயணங்களைச் செய்ய வேண்டாம். அமைதியாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அக்கம்பக்கத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

புதன் -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும், குறிப்பாக வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வீர்கள்.

வியாழன் -
உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாளுங்கள். நிதானத்தை இழக்கவேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். உறவினர்களிடம் கவனமாகப் பேசுங்கள்.

வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நேற்று ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகள் மனநிறைவைத் தருவதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான வளர்ச்சி சீராக இருக்கும். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் பற்றிய செய்தி உறுதியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
விநாயகப்பெருமானை வணங்குங்கள். விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

மேலும்