குருப்பெயர்ச்சி பலன்கள் ;    உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே; மறுமலர்ச்சி; முன்னேற்றம்; தொழிலில் ஏற்றம்; எதிரிகள் தொல்லை இல்லை! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

உத்திரட்டாதி:

கிரகநிலை:

குரு பகவான் உங்களின் இருபத்தி ஐந்தாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்கத் துடிக்கும் உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். குருபகவானை நீங்கள் தொடர்ந்து வழிபட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண முடியும். குடும்பத்தில் தாயாரின் உடல் நிலையில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். உங்கள் மனதில் இருந்து வந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு செய்வீர்கள். உங்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் அனைவரும் விலகி விடுவார்கள். புதிய கட்டிடங்கள் கட்டுதல், பெரிய கடைகளை வாடகைக்கு எடுத்தல் போன்ற செலவுகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உடல் நிலையில் இருந்து வந்த பின்னடைவு சரியாகும். சக பணியாளர்களால் ஏற்பட்ட சில அவமதிப்புகள் சரியாகும்.

பெண்களில் சிலர் தீராத நோயினால் அவதிப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

மாணவர்கள் உங்கள் படிப்பிற்காக விலை உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவீர்கள். மனதில் இருந்த சந்தேகங்கள் தீரும்.

அரசியல்துறையினருக்கு உங்களை விமர்சனம் செய்து வந்த எதிரிகள் காணாமல் போவார்கள். மேலிடத்திலும் உங்களைப் பற்றி அவதூறு பேசி வந்தவர்களும் விலகிச் சென்று விடுவார்கள்.

கலைத்துறையினருக்கு உங்களின் திறமையை புரிந்து கொள்ளாமல் உதாசினப்படுத்தியவர்கள், உங்களைப் புரிந்து கொண்டு வாய்ப்பு தருவார்கள். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.

பரிகாரம்:

கிராம தெய்வத்தை வழிபட்டு வாருங்கள். வேலையில் உள்ள கூடுதல் பொறுப்புகளை சமாளிப்பீர்கள்.

மதிப்பெண்கள்: 69% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்