- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அவிட்டம்:
கிரகநிலை:
குரு பகவான் உங்களின்நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
எதையும் சிந்தித்துச் செயலாற்றும், அவிட்ட நட்சத்திர அன்பர்களே!
இந்த குருப்பெயர்ச்சியால் உங்கள் சந்ததிகளுக்கு வேண்டியதைச் செய்ய அருள் புரிகிறார். நீண்ட நாட்களாக அவர்கள் விரும்பியதை செய்யப் போகிறீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பார்கள். உங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த விஷயங்கள் இப்போது நடைபெறும்.
தொழில்செய்பவர்கள் தேவையில்லாமல் உங்கள் தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய ஆட்களை நம்பி அதிக முதலீடு செய்ய வேண்டாம்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியருடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாகக் கழிப்பதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
பெண்களில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் இல்லாமல் இருக்கும்.
மாணவர்களுக்கு சிறந்த குரு கிடைப்பார். எதிர்பாலினத்தாரால் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து நீங்கள் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள்.
அரசியல்துறையினருக்கு மேலிடத்திலிருந்து அழைப்பு வரும். உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் புகழ்ச்சிக்கு செவி சாய்க்காமல் இருப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு உங்கள் சொந்த ஊரில் நல்ல பெயர் கிடைக்கும். உங்கள் குடும்பத்தார் பெருமைப்படும் அளவிற்கு பெரிய ஒப்பந்தங்கள் உங்களைச் தேடி வரும்.
பரிகாரம்:
முருகப் பெருமான் வழிபாட்டினால் சொத்து சேரும்.
மதிப்பெண்கள்: 72% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
**********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago