- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
திருவோணம்:
கிரகநிலை:
குரு பகவான் உங்களின் இரண்டாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
எப்போதும் விழிப்புடனே நடந்து கொள்ளும் திருவோண நட்சத்திர அன்பர்களே!
இந்த குருப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் ஒவ்வொரு பொன்னான தருணத்தையும் உங்களுக்கு உணர்த்தும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். அது சம்பந்தமான வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். கணவன் - மனைவி இடையே இருந்த மனஸ்தாபங்கள் அகலும்.
தொழில் - வியாபாரம் எப்போதும்போல் இருக்கும் என்றாலும் உங்களின் இடைவிடாத முயற்சியால் லாபம் பெறலாம். எதிர்பார்த்த லாபம் இல்லை என்று மனம் கலங்க வேண்டாம். நஷ்டம் இல்லாமல் தொழில் செய்ய குரு பகவான் அருள் புரிவார்.
உத்தியோகஸ்தர்களுக்கு அதிர்ஷ்டத்தால் சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளியில் கொடுத்த பணம் சில அலைச்சல்களுக்குப் பின் கிடைக்கும்.
பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவர் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது உங்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரும்.
மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். பெற்றோர்களின் தொழிலைப் படிப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நன்றாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்துறையினருக்கு பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். மனைவி வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து வாழ்வில் சந்தோஷம் பிறக்கும்.
கலைத் துறையினருக்கு பொருளாதார ரீதியாக சிறப்பாக இல்லை என்றாலும், புகழ் ,பாராட்டு மற்றும் ரசிகர்கள் பெருகுவார்கள்.
பரிகாரம்:
ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தால் திருமணம் வாய்க்கும்.
மதிப்பெண்கள்: 68% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
**********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago