பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
உத்திராடம்:
கிரக நிலை:
குரு பகவான் உங்களின் மூன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
திட்டங்களைத் தீட்டுவதில் வல்லவரான உத்திராட நட்சத்திர அன்பர்களே!
இப்போதைய குரு பகவான் மாற்றத்தால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடையப் போகிறீர்கள். சிலருக்கு நல்ல வேலை மாற்றம், தொழில் மாற்றம் வரப் போகிறது. குடும்பத்தில் இவ்வளவு காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர்களுக்கு இப்போது முன்னேற்றம் உண்டாகும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி மகிழ்வீர்கள்.
தொழில் சூடு பிடிக்கும். லாபமடைவீர்கள். வீண் அலைச்சல் இருந்து கொண்டே இருந்த நிலை மாறும். வர வேண்டிய பணம் வந்து சேரும்
உத்தியோகஸ்தர்களுக்கு வேலை இடத்தில் ஏற்பட்டு வந்த சில தொடர் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வேலையை விட்டவர்களும் இப்போது தொடருவார்கள்.
பெண்களுக்கு புத்திர பாக்கியம் மற்றும் திருமணத்தில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று இருந்த ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்களின் மனக்கஷ்டங்கள் நீங்குவதன் மூலம் கல்வியில் கவனம் செலுத்த முடியும். பண்பும், பரிவும் மற்றவர்கள் மீது அதிகமாகும்.
அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். இதன் மூலம் நீங்கள் நிம்மதியாக செயல்படமுடியும்.
கலைத்துறையினர் அதிக உழைப்பை தர வேண்டியிருக்கும். இரவு பகலாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியமும் கிடைக்கும்.
பரிகாரம்:
சிவபெருமான் ஆராதனையால் அரசு அனுகூலம் ஏற்படும்.
மதிப்பெண்கள்: 69% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
**********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago