குருப்பெயர்ச்சி பலன்கள் ; மூலம் நட்சத்திர அன்பர்களே; தடைகள் அகலும்; உத்தியோகப் பிரச்சினை தீரும்; பெண்களுக்கு உற்சாகம்; வருத்தங்கள் தீரும்! 

By செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மூலம்:

கிரகநிலை:

குரு பகவான் உங்களின் ஐந்தாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

தடைகளைக் களைய போராடும் மூல நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சுப விரயங்களைத்தான் ஏற்படுத்தும். புதிய வீடு கட்டி குடி பெயருவீர்கள். இல்லத்தில் சுப நிகழ்வுகள் அதிகமாக நடைபெறும். குடும்பம் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். தந்தையாரின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். தந்தை வழி சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினைகள் மட்டும் அவ்வப்போது வந்து போகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவினர் ஒருவர் வீட்டிற்கு வருவார்.

தொழிலில் இருந்து வந்த தடைகள் அகலும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான லாபத்தை குரு பகவான் வாரி வழங்கி விடுவார். புதுத் தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனப் பழுதுகள் வரலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி சாதகமாகவே இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உடன் பணிபுரிபவர்களுடன் இருந்து வந்த மன வருத்தங்கள் அகலும்.

பெண்களுக்கு சோம்பல் குறையும். உடலில் இருந்து வந்த சில குறைபாடுகளும் அகலும். அதனால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீங்கள் எதிரியாய் நினைத்தவர்கள் கூட உங்களுக்கு நண்பர்கள் ஆவார்கள்.

அரசியல்துறையினர் வீண் அலைச்சல், கோயில் சார்ந்த விஷயங்களில் பிரச்சினை போன்றவற்றை சந்தித்திருப்பார்கள். அவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு நிறைய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து தட்டிப்போயிருக்கும். இனி அவ்வாறு இருக்காது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பரிகாரம்:

முன்னோர்கள் பிரார்த்தனையால் புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

மதிப்பெண்கள்: 75% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்