குருப்பெயர்ச்சி பலன்கள் ; விசாகம் நட்சத்திர அன்பர்களே! நன்மைகள் ஏராளம்; பிரச்சினைகள் தீரும்; வீட்டில் நிம்மதி; வேலையில் கவனம்!  

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விசாகம் :

கிரகநிலை:

குரு பகவான் உங்களின் எட்டாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து முடிக்கும் விசாக நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியால் பலவித நன்மைகள் உங்கள் வாழ்வில் நடக்கப் போகிறது. உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் அகலும். குடும்பத்தை பொறுத்தவரை கணவன் - மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் விலகி இன்பமாக வாழ வழிபிறக்கும். இளைய சகோதரர்களிடையே இருந்த சண்டைகள், பிளவுகள் காணாமல் போகும். நீண்ட நாட்களாக வர இருந்த பணவரவுகள் இப்போது வரலாம். தாயாரின் அன்பு அதிகரிக்கும்.

தொழிலைப் பொறுத்தவரை சற்று மந்தநிலை காணப்பட்டாலும் சில வெற்றிகள் உண்டாகும். தந்தையார் தொழிலை கவனித்து வரும் அன்பர்களுக்கு நல்ல லாபம் உண்டாக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பிரச்சினைகள் வந்து போகும். நம்பிக்கையாக யாரிடமும் எதையும் சொல்ல வேண்டாம். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் சென்றுவரவேண்டியிருக்கும்.

பெண்களுக்கு திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வரன்கள் அமையப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டி வரலாம்.

மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மேற்படிப்பில் அக்கறையுடன் படித்தால் மட்டுமே நல்ல வேலை எதிர்காலத்தில் அமையும்.
அரசியல்துறையினர் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஆயத்தமாவீர்கள். சிலரது காரியங்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

கலைத்துறையினருக்கு விருதுகள், பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளைய கனவுகள் பலிக்கும். வெளிநாடுகளில் படப்பிடிப்புக்காக சென்று வருவீர்கள்.

பரிகாரம்:

பழநி முருகப் பெருமானை வழிபாட்டால் புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

மதிப்பெண்கள்: 65% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்