குருப்பெயர்ச்சி பலன்கள் ; பூரம் நட்சத்திர அன்பர்களே! எதிர்பார்த்ததை விட சிறப்பு;பதவி உயர்வு; இடமாற்றம்; எதிலும் லாபம்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


பூரம்:


கிரகநிலை:
குரு பகவான் உங்களின் பதின்மூன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


சிறந்த அணுகுமுறையுடன் முன்னேறத் துடிக்கும் பூரம் நட்சத்திர அன்பர்களே!


இந்த குருப்பெயர்ச்சியால் வாழ்வில் நிறைய அனுபவங்களை சந்திக்கப் போகிறீர்கள். பலரின் நட்பும் உங்களுக்கு கிடைத்து அதில் நல்ல செயல்களையெல்லாம் நிரூபிக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் திருமணத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீங்கள் எதிர்பார்த்திருந்ததை விட சிறப்பான வாழ்க்கை அமையும். உங்கள் மனம் தெளிவடையும். தோற்றப் பொலிவு உண்டாகும்.


தொழிலில் உங்களின் உயர்வு சிறப்பாக இருக்கும். தைரியமாக எதையும் கையாளுவீர்கள். மனதுக்குள் ஒரு இலக்கை வைத்து அதை நோக்கி ஓடுவீர்கள். நேரம், தைரியம், வாக்கு இவை அனைத்தும் உங்கள் வெற்றிக்கு தோள் கொடுக்கும்.


உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடம் உங்களின் மேல் வைத்திருந்த தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் அமையும். பதவி உயர்வும், பணி இடமாற்றமும் உங்களைத் தேடி வரும்.


பெண்களுக்கு நஷ்டத்தில் தொழில் செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த தொல்லைகள் அகலும்.


மாணவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள். அதிர்ஷ்டத்தால் சில வாய்ப்புகளும், சலுகைகளும் உங்களுக்குக் கிடைக்கும்.


அரசியல்துறையினருக்கு உங்களின் புகழ் அனைவருக்கும் தெரியவரும். உங்களின் ஒரு செயலால் மிகுந்த பாராட்டினைப் பெறப்போகிறீர்கள்.


கலைத்துறையினருக்கு பொருளாதார வகையில் உங்கள் நிலை உயரும். நீங்கள் எதிர்பாராமல் சில முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.


பரிகாரம்:


ஆண்டாள் வழிபாட்டினால் கடன்கள் அடையும்.


மதிப்பெண்கள்: 78% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்