- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ஆயில்யம்:
கிரகநிலை:
குரு பகவான் உங்களின் பதினைந்தாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
உயர்வான எண்ணத்தைக் கொண்டிருக்கும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே!
இந்த குருப்பெயர்ச்சியால் அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஆன்மிகத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்கள் கூறும் அறிவுரையை கேட்டுக் கொள்ளுங்கள்.
தொழில் செய்பவர்கள் கடல் தாண்டிச் சென்று வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராத பண வரவு இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அவற்றை சிறப்பாகச் செய்வதன் மூலம் உங்கள் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவரும்.
பெண்களுக்கு குடும்பத்தில் உங்களைப் புரிந்து நடந்து கொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதை செய்து கொடுத்து மகிழ்ச்சியடைவீர்கள்.
மாணவர்களில் தொழிற்கல்வி பயில்வோருக்கு சில சலுகைகள் கிடைக்கும். வெளியூர் சென்று தொழிற்சாலைகளில் செயல்முறையில் பயில வாய்ப்புகளும் கிடைக்கும்.
அரசியல்துறையினருக்கு மனதிற்கு நிம்மதி தரும் சில காரியங்கள் நடக்கும். கட்சித் தொண்டர்கள், மேலிடம் என அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கலைத்துறையினருக்கு உங்கள் புகழ் உயரும் அளவிற்கு ஒப்பந்தகங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். அதனால் தன்னம்பிக்கை வளரும்.
பரிகாரம்:
நாகதேவதையை ஆராதனை செய்தால் வீடு மனை வாய்க்கும்
மதிப்பெண்கள்: 68% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
****************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago