குருப்பெயர்ச்சி பலன்கள் ; மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே! கடன் தீரும்; வீடு மனை யோகம்; லாபம் கூடும்; எதிலும் வெற்றி! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மிருகசீரிஷம்:


கிரகநிலை:


குரு பகவான் உங்களின் பத்தொன்பதாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


நினைத்ததை நிறைவேற்றத் துடிக்கும் மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே!

இந்த குருபெயர்ச்சியைப் பொறுத்தவரை நீண்டநாட்களாக இருந்த கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்தில் ஆடை, ஆபரணம், வாகனம் போன்ற நீங்கள் எதிர்பார்த்திருந்த அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டி வரலாம்.

தொழில் - வியாபாரத்தில் ஏற்றுமதி -இறக்குமதி தொழிலில் நல்ல லாபத்தைக் காண முடியும். உங்களுக்கு தொழிலில் கிடைக்க வேண்டிய நியாயமான பங்குகள் நல்ல முறையில் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதால் உங்கள் நிலையும் உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். உடன் பணிபுரிபவர்களிடம் கடன் வாங்கியிருந்தால் அதை வரும் காலங்களில் திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். தொலைந்து போன சில ஆவணங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் ஓரளவிற்கு திரும்பக் கிடைக்கும்.

மாணவர்களுக்கு நட்பு வட்டாரம் அதிகரிக்கும். மேற்படிப்பு விஷயங்கள் தள்ளிப் போய்க் கோண்டிருந்ததல்லவா. இப்போது அது சரியாகி உங்கள் கல்வியைத் தொடர அழைப்புகள் வரும்.

அரசியல்துறையினர் தானுண்டு தன் வேலையுண்டு என்று உங்கள் கடமைகளை மட்டும் செய்து வருவீர்கள்.

கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்கள் உங்கள் பெயரை முன்மொழிவார்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

பரிகாரம்: நவக்கிரக வழிபாடு மங்கல காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.

மதிப்பெண்கள்: 82% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

**********************

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்