- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பரணி:
கிரகநிலை:
குரு பகவான் உங்களின் இருபத்தி இரண்டாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
பிறர் மனதை புரிந்து கொண்டு செயல்படும் பரணி நட்சத்திர அன்பர்களே!
இந்த குருப் பெயர்ச்சியால் தொழிலில் ஏற்றம் காணப்படும் என்பதை பொதுவாக உங்கள் நட்சத்திரத்திற்கு சொல்லலாம். மற்றவர்கள் தலையீடு குடும்பத்தில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலையில் தொய்வு இருந்திருந்தால், அவர்கள் முன்னேற குரு பகவான் அருள்புரிவார். தந்தையாருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். இருவரும் பேசி முடிவுகளை எடுப்பீர்கள்.
தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்களை ஏமாற்றுபவர்களை கண்டுபிடிப்பீர்கள். ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செயல்படும் எண்ணம் தோன்றும். யாரையும் நம்பி ஏமாறாமல் கவனமுடன் இருப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். வேலையில் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். முழு மனதுடன் வேலையில் ஈடுபடுவீர்கள்.
பெண்களில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மாணவர்கள் தங்களின் பேச்சுத்திறமையால் முன்னேற முடியும். எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.
அரசியல்துறையினர் கட்சிப் பணிகளில் சிரத்தையுடன் செயல்பட்டால் உங்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கட்சித் தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கலைத்துறையினருக்கு தயாரிப்பாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.. கவலை வேண்டாம்.
பரிகாரம்:
காளியை வணங்கினால் பொருளாதாரம் உயரும்
மதிப்பெண்கள்: 72% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
******************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago