ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (அக் - 12 முதல் 18 வரை) 

By செய்திப்பிரிவு


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


ரோகிணி -

எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும் வாரம். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும்.

வருமானத்திற்கு குறை இருக்காது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பணவரவு இருக்கும். ஒரு சிலருக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டு கடைசி நேரத்தில் நெருக்கடிகள் தீரும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் தேடி வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். உறவினர் ஒருவரால் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்.

செவ்வாய் -
அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்கு வாதங்கள் செய்ய வேண்டாம்.

புதன் -
நேற்றைய பிரச்சனைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாகவும் வியாபாரம் தொடர்பாகவும் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். சகோதரர்களிடம் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் இப்போது சமாதானம் ஏற்படும். சொத்து தொடர்பான பிரச்சினைகளை பேசி முடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

வியாழன் -
வியாபார விஷயங்கள் சுமுகமாக நடைபெறும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணிகளை சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிக்க வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்க வேண்டியது வரும் அல்லது பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்களை வாங்க வேண்டியது வரலாம். வாகனப் பழுது உள்ளிட்டவைகளை சரி செய்யும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகக் கூடிய நாளாக இருக்கும்.

சனி -
பணவரவு இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார விஷயங்கள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். தொழிலில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நீங்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ஞாயிறு -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகா விஷ்ணு வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
****************


மிருகசீரிடம் -

தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

குடும்ப பிரச்சினையில் வெளி நபர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். அலுவலக வேலைகளை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டு செய்து முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அபரிமிதமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் வியாபாரத்தோடு மற்றொரு வியாபாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது.

சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது பல வேலை ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கும், பணவரவு மனநிறைவைத் தரும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்ய வேண்டிய நிலை இனி இருக்காது. மாணவர்களின் கல்வியில் சீரான வளர்ச்சி இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பயணங்கள் ஏற்படும். வியாபாரம் சீராக இருக்கும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

செவ்வாய் -
வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். அலுவலக வேலைகளில் ஏற்பட்டிருந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புதிய வேலை தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும்.

புதன் -
நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகமாக ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சகோதர வகையில் இருந்த வருத்தங்கள் தீரும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி -
பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். தொழில் தொடர்பாக சந்திப்புக்கள் ஏற்படும். முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரம் தொடர்பாக நீண்ட நாளாக வராமலிருந்த பணம் வந்துசேரும்.

சனி -
குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி லாபமும் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ஞாயிறு -
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு குடும்ப உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் : முருகப் பெருமான் வழிபாடு செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். தேவைகள் நிறைவேறும். நினைத்தது நடக்கும்.
**************


திருவாதிரை -


அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மருத்துவச் செலவு வெகுவாக குறையும். குடும்பத்தில் ஒரு சில சச்சரவுகள் தோன்றினாலும் அது எல்லாம் அனுசரித்துச் செல்லவேண்டும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.

வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பெண்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறையும் கூடுதல் கவனமும் செலுத்தவேண்டும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகக் கூடிய நாள். அலுவலக வேலையில் அழுத்தங்கள் குறையும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகளில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவி கிடைக்கும். இன்று அது தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

புதன் -
நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். எந்த முயற்சியாக இருந்தாலும் முழு வெற்றியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் முற்றிலுமாக அகலும்.

வியாழன் -
எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபார விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேச வேண்டும்.

வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு இன்று கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தம் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.

சனி -
மனதில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரக் கூடிய நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும்.

ஞாயிறு -
குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் பழுதடைந்த பொருட்களை மாற்றும் வாய்ப்பும் உள்ளன. அலுவலகப் பணிகளில் இருந்த வேலைகளையும் இன்று செய்து முடிப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ நடராஜப் பெருமானை வணங்குங்கள். தடைகள் அகலும், நன்மைகள் பெருகும்.
*********

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்