- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
கிரகநிலை:
ராசியில் குரு (வ), சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,சந்திரன், செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன், கேது என கிரக நிலவரம் உள்ளது.
பலன்கள்:
» துலாம், விருச்சிகம், தனுசு; இந்த வாரம் உங்களுக்கு எப்படி? அக்டோபர் 7 முதல் 13ம் தேதி வரை
» கடகம், சிம்மம், கன்னி; இந்த வாரம் உங்களுக்கு எப்படி? அக்டோபர் 6 முதல் 12ம் தேதி வரை
சொந்த உழைப்பினால் உயரும் திறமை உடைய மகர ராசியினரே!
உங்களுக்கு பிறரின் உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் ஆக்கபூர்வமான யோசனைகள் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவு படுத்த ஆலோசனைகளை மேற்கொள் வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப்பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப் படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமுகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை.
பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் இருக்கும். அறிவியல், கணித பாடங் களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
பரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
******************************************************
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,சந்திரன், செவ்வாய், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ), சனி என கிரக நிலவரம் உள்ளது.
பலன்:
எதிர்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு செயலாற்றும் கும்ப ராசியினரே!
இந்த வாரம் அடுத்தவர்களுக்கு உதவப் போய் அதனால் அவதிப்பட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களைக் கையாளும்போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவை யும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.
குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.
பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்து டன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
******************************************************
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,சந்திரன், செவ்வாய், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், கேது - லாப ஸ்தானத்தில் குரு (வ), சனி என கிரக நிலவரம் உள்ளது.
பலன்கள்:
அடுத்தவரை பயன்படுத்தி பல காரியங்களை சாதிக்கும் திறமை உடைய மீன ராசியினரே!
நீங்கள் பொது வாழ்க்கையில் புகழ்பெறுவீர்கள். இந்த வாரம் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துகளை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.
தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப் படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு கல்விக்குத் தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: குலதெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தைப் போக்கும். செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும்.
******************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago