மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 30 முதல் அக்டோபர்  6ம் தேதி வரை

By செய்திப்பிரிவு


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


கிரகநிலை:
ராசியில் சனி, குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

உள்ளூர உடல்வலிமையும் உள்ள உறுதியும் பெற்ற மகர ராசியினரே!

இந்த வாரம் பொருள் சேர்க்கையும் உடல் ஆரோக்கியமும் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் கட்டுக்குள் இருக்கும். தொழில் முன்னேற்றம் உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும். உடன் பிறப்புகளிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

பெண்களுக்கு இந்த ஆண்டு காரிய அனுகூலம் தருவதுடன் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கச் செய்யும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு சேரும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைநீங்கி நல்லமுறையில் நடக்கும். பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் காண்பார்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
*******************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயனசயன போக ஸ்தானத்தில் சனி, குரு (வ) என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

ஒரு பார்வையிலேயே மற்றவரை எடை போடும் திறமை உள்ள கும்ப ராசியினரே!

இந்த வாரம் எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரத்து குறையலாம். வாகனம், வீடு மூலம் செலவுகளும் அவ்வப்போது ஏற்படலாம். எதையும் செய்யும் முன் தயக்கம் உண்டாகலாம்.

குடும்பத்தில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புத்திசாதுர்யம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். பெண்களுக்கு பல நன்மைகள் நடக்கும். மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.

பரிகாரம்: விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
****************************************************************************************************************************************


மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி, குரு (வ) என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

எந்தவொரு பிரச்சினைகளையும் சமாதானமாக பேசி முடிக்கும் சாமர்த்தியம் மிகுந்த மீன ராசியினரே!

இந்த வாரம் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்தி தருவதாக உள்ளது. வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. புதிய வீடு கட்டும் பணி அல்லது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும்.

கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். வழக்குகளில் சாதகமான பலன் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த நோய் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபார போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து அதிகப்படும். மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். சக மாணவர்கள் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்