கடகம், சிம்மம், கன்னி; இந்த வாரம் உங்களுக்கு எப்படி?

By செய்திப்பிரிவு


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), குரு (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.


இந்த வாரம் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டுச் செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம்.

பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்திதரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள் தரும்போது கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

குடும்பத்தில் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும்.

பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம் சில்லறைச் சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசிப் பழகுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும்போது கவனம் தேவை.

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை சமர்ப்பித்து வணங்க பிரச்சினைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
*****************************************************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
தனவாக்கு ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

இந்த வாரம் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும்.

தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் பணவரத்து நன்றாக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும்.

கேதுவின் சஞ்சாரம் ஆன்மிகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனகசப்பு மாறும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
************************************************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

இந்த வாரம் நெருக்கடியான பிரச்சினைகள் நீங்கும்.

பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்றப் பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் பண வரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.

பரிகாரம்: சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்கு நெய் வாங்கிக் கொடுத்து வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
*******************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்