- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
கிரகநிலை:
ராசியில் சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
இந்த வாரம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும்.
» துலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 9 முதல் 15ம் தேதி வரை
» கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 9 முதல் 15ம் தேதி வரை
வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும்.
தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும்.
குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும்.
பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். கலைத்துறையினர் நேரம் தவறி உண்பதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராட வேண்டி இருக்கும்.
மாணவர்கள் கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
பரிகாரம்: தினமும் காவல் தெய்வத்தை வழிபட நன்மையான பலன்கள் உங்களைத் தேடி வரும்.
***************************************************************************************
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ராசியில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயனசயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.
இந்த வாரம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும்.
விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். கலைத்துறையினருக்கு கலைகாரகன் சுக்கிரன் புதிய தொடர்புகளை ஏற்படுத்தித் தருவார். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
பரிகாரம்: தினமும் அருகம்புல்லால் விநாயகரை வணங்கி வந்தால் தடைகள் அனைத்தும் விலகும்.
***************************************************************************************
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - சப்தம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.
இந்த வாரம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும்.
மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும்.
வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாகக் கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பெரும்புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
பரிகாரம்: தினமும் ஆஞ்சநேயரை வழிபட மனதில் இருக்கும் சஞ்சலம் நீங்கும்.
***************************************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago