- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் - விரய ஸ்தானத்தில் புதன், செவ்வாய் என கிரகநிலை உள்ளது.
இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். உங்களது சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும்.
» கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 9 முதல் 15ம் தேதி வரை
» மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; செப்டம்பர் 9 முதல் 15ம் தேதி வரை
தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். விருந்தினர் வருகை இருக்கும்.
பெண்களுக்கு காரியத் தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளான உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
பரிகாரம்: தினமும் ஆண்டாளை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
***************************************************************************************
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள்.
தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது மிகவும் நிதானமாகப் பேசுவது நன்மை தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போதும் நிதானமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வழக்கத்தை விட செலவு கூடும். அரசியல்வாதிகள் வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சக மாணவர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
பரிகாரம்: தினமும் அம்மனை வழிபாடு செய்து வர உத்தியோகத்தில் மேன்மை கிடைக்கும். மனதில் இருந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.
***************************************************************************************
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயனசயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
இந்த வாரம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும்.
செவ்வாய் சஞ்சாரத்தால் உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். பெண்கள் வலியச் சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம்.
கலைத்துறையினரின் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். அரசியல்வாதிகள் மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். மாணவர்கள் எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
பரிகாரம்: தினமும் சிவனை வழிபட தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
***************************************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago