மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள்; செப்-6 முதல் 12ம் தேதி வரை 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மகம் -

நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.

நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் படிப்படியாக தீரும். குடும்ப உறவுகள் பலப்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் தீரும்.

சேமிப்பில் இருந்து ஒரு சில செலவுகளை குடும்பத்தினருக்காக செய்து தருவீர்கள். அலுவலகத்தில் இயல்பான நிலையே தொடரும். அலுவலக நண்பர்கள் உங்களுக்கு தாமாக முன் வந்து உதவுவார்கள்.

தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். தாமதப்பட்டுக்கொண்டிருந்த தொழில் ஒப்பந்தங்கள் இப்போது நிறைவேறும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த முடக்கமான நிலை மாறி படிப்படியாக முன்னேற்றத்தை காணலாம்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் புதிய உத்வேகம் பெறுவார்கள். கல்வியில் நல்ல முனைப்போடு கவனம் செலுத்துவார்கள். கலைத்துறையினருக்கு நண்பர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

செவ்வாய் -
மனதில் தேவையற்ற எண்ணங்கள் வந்து போகும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். கமிஷன் தொடர்பான வியாபாரிகளுக்கு லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் விலகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் தேவையான உதவிகளை செய்து தருவார்கள். அது பற்றிய தகவல் இன்று கிடைக்கும்.

வியாழன் -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நெருக்கடியான நிலை தோன்றும். நிதானமாக இருந்தால் இவை அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதையும் மன உறுதியோடு எதிர்கொள்ள வேண்டும்.

வெள்ளி -
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் சுயதொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை உருவாகும். அதற்கு தேவையான உதவிகளும் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் பேசி முடிக்கப்படும்.புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் இன்று உறுதியாகும்.

சனி -
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வத்திற்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு தருவார்கள். புதிதாக அறிமுகமான நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை அன்னையை வணங்குங்கள். அன்னைக்கு செவ்வரளி மாலை சூட்டுங்கள்., பிரச்சினைகள் தீரும். நினைத்தது நிறைவேறும்.
************

பூரம் -

அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் முற்றிலுமாக விலகும்.

சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். புதிதாக வீடு வாங்கும் வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். தாயாரின் உடல் நலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.

தந்தை மற்றும் தந்தைவழி உறவுகளிடம் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். அலுவலகப் பணியில் இருந்த அழுத்தங்கள் விலகும். இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் எதிர்பார்த்தபடியே வளர்ச்சிப் பாதையில் செல்லும். ஒரு சில தடைகள் இருந்தாலும் அந்த தடைகளை தாண்டி வெற்றி பெறக்கூடிய வாரமாக இருக்கும்.

வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

இந்த வாரம் -

திங்கள் -
நினைத்தது நிறைவேறும் நாள். எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணியது எண்ணியபடியே செயலாகும் நாள்.

புதன் -
எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகி இருப்பது நல்லது. உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணியில் உங்களுடைய வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். அடுத்தவர்கள் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அதிக நன்மைகள் ஏற்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி -
அலுவலகத்தில் பணிச்சுமை நீடிக்கும். தொழில் செய்யும் இடத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபத்தை மற்றவர்களோடு பங்கு போட வேண்டியது வரும். எந்தச் செயலிலும் அதிக கவனம் வேண்டும். வியாபார விஷயங்களில் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டும்.

சனி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒற்றுமை நீடிக்கும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.

ஞாயிறு -
பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொறுமையும் நிதானமும் அவசியம். பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் தேவை.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீநடராஜர் தரிசனமும், வழிபாடும், நன்மைகளைத் தரும். தேவைகள் பூர்த்தியாகும். மனநிம்மதி உண்டாகும்.
**************

உத்திரம் -

நினைத்தது அனைத்தும் நடக்கும் வாரம். பணவரவுகள் தாராளமாக இருக்கும்.

இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். புதிய வீடு வாங்குவதற்கான வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக பேசி வந்த முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இனி உங்களுக்கு சாதகமாக மாறும்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

தொழிலில் இனி எந்த விதமான தடைகளும் இருக்காது, தாமதங்களும் இருக்காது. தொழில் சீரான வளர்ச்சி பாதைக்கு திரும்பும். விலகிச் சென்ற ஊழியர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது, நண்பர்களோடு இணைந்து புதிய வியாபாரத்தை துவங்குவது என அனைத்தும் இனி சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு இயல்பாக சொத்துச் சேர்க்கை ஏற்படும். சுய தொழில் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி அதில் வெற்றியும் பெறுவார்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் திறமையை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பாக அது அமையும்.

இந்த வாரம் -

திங்கள் -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு மகிழ்வீர்கள்.

செவ்வாய் -
நிதானமாக செயல்பட வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருக்கவேண்டும். அலுவலகப் பணிகளில் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்துக் கொள்வது நல்லது.

புதன் -
தாமதப்பட்ட பணவரவு இன்று கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

வியாழன் -
நன்மைகள் நடைபெறும் நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வெள்ளி -
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி -
தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உறவினர்கள் வருகை ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய வழிபாடு செய்யுங்கள். ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்