- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - விரய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
துலா ராசி அன்பர்களே!
» கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை
» மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை
இந்த வாரம் உங்கள் முரட்டுத்தனத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது.
தொழில் செய்பவர்களுக்கு நண்பர்கள் உதவிகள் செய்வர். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். சிலர் வெளிநாடு பயணங்கள் செல்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம்.
பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போங்கள். வாகனங்களைக் கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே கூடாது. தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும்.
மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லிக் கொடுப்பதை விடுத்து நீங்கள் நன்று படியுங்கள்.
பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு
************************************************************************
விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த வாரம் தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். மிகுந்த பொருட்செலவில் சுபவிரயங்கள், எடுத்த காரியங்களில் தடை, எதுவுமே நேர்மாறாக இருப்பது என கடந்த காலங்களை மிகுந்த சிரமத்துடன் கழித்தீர்களல்லவா, இனி வரும்காலம் மிகவும் நல்லகாலம். உங்கள் பேச்சை நீங்களே கேட்காமல் இருந்து வந்த நிலைமை மாறும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.
நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், பணிப் பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.
பெண்கள் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு்.
பரிகாரம்: முருகப் பெருமானை தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
************************************************************************
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - அயனசயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
தனுசு ராசி அன்பர்களே!
இந்த வாரம் தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும்.
குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும்.
தொழில் செய்பவர்கள் எங்கு முதலீடு செய்வது என்பதைத் தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்கக்கூடும்.
வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். பெண்கள் சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: சித்தர்களை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் சிறக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
************************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago