கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்
(புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

கடக ராசி அன்பர்களே!

இந்த வாரம் உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிப்பார்கள். உங்களது மேலான யோசனைகளைச் சொல்ல தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது.

குடும்பத்தில் உங்களைப் பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

தொழில் செய்பவர்கள் உங்கள் வியாபாரத்தைப் பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். தூங்கப் போகும் முன் எந்த விதமான யோசனைகளும் வேண்டாம். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள்.

பெண்களுக்கு தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.

பரிகாரம்: புதன்கிழமைதோறும் ஸ்ரீஹயக்ரீவ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
************************************************************************

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் சூர்யன், செவ்வாய் - தனவாக்கு ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

சிம்ம ராசி அன்பர்களே!

இந்த வாரம் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டும். தங்கள் உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். இருந்தாலும் அவ்வப்போது சிற்சில அசௌகரியங்கள் வந்து போகலாம்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

தொழில் செய்பவர்கள் முதலீடுகள் செய்யும்போது மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தூங்கப் போகும் போது தேவையற்ற வீண் குழப்பங்களை களையுங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களிடம் பேசும்போதும் கவனமுடன் பேசவும். தேவையில்லாதவற்றை பேச வேண்டாம்.

பெண்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள். தந்தையாருடன் தர்க்கம் கூடவே கூடாது.

நண்பர்களின் மீது கோபம் கொள்வதையும் தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. மிகுந்த நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம்.

பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
************************************************************************

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில் புதன், சுக்கிரன் - தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயனசயன போக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

கன்னி ராசி அன்பர்களே!

இந்த வாரம் தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
தொழில் செய்பவர்கள் லாபகரமான முதலீடுகள் செய்யத் தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள். தாய் தந்தையரை வணங்கி எந்தக் காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலிடம் கொடுக்கும் அனைத்து வேலைகளையும் திறமையாகச் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டி வரலாம்.

மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. சின்ன சின்ன இடையூறுகளை களைந்தால் உங்கள் சாதனைகளை பார்க்கலாம்.

பரிகாரம்: முடியும்போதெல்லாம் பெருமாள் கோயிலுக்குச் சென்று வலம் வந்து பிரார்த்தனை செய்து வந்தால் நன்மைகளைப் பெறலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்