மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 25ம் தேதி வரை

By செய்திப்பிரிவு


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - ரண ருண ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.
23ம் தேதி புதபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் மிக பலமாக இருக்கிறார். பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும்.

வீடு மனை சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.

வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும்.

வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும்.

பெண்களுக்கு பல நாள் கஷ்டம் விலகும். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துகளை கூறாமல் அனுசரித்து செல்வது சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

பரிகாரம்: அம்மனை வணங்க எதிர்ப்புகள் விலகும்.
****************************

ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)


கிரகநிலை:
ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.
23ம் தேதி புதபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் திறமையாக எந்த ஒரு காரியத்தையும் செய்து பாராட்டும், மதிப்பும், மரியாதையும் பெறுவீர்கள். திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது.

எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். குருவின் பார்வையால் அனைத்து தடைகளும் அகலும். உடல்நிலையில் தகுந்த கவனம் அவசியம். குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும்.

வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

பெண்கள் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வருமானம் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

பரிகாரம்: சிவபெருமானை வணங்க பொருளாதாரச் சிக்கல் தீரும்.
****************

மிதுனம்
(மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - சுகஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
23ம் தேதி புதபகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் நீங்கள் விவேகத்துடன் முடிவெடுப்பீர்கள். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை சார்ந்த விஷயங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். உடல்நிலையில் மிக அதிக கவனம் அவசியம். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும்.

கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும்.. அரசாங்க அனுகூலம் கிடைக்கும். பெண்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது.

பரிகாரம்: துர்கையை வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்