- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அஸ்தம் -
பெருமளவு நன்மைகள் நடைபெறும் வாரம். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
குடும்பத்தில் அமைதி நிலவும் இதுவரை இருந்த அநாவசிய செலவுகள் இனி கட்டுக்குள் இருக்கும். வீண் செலவுகள் ஏற்படாது. மருத்துவச் செலவுகளும் வெகுவாகக் குறையும்.
» மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 16 முதல் 22ம் தேதி வரை)
» புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 16 முதல் 22ம் தேதி வரை)
தந்தை வழி உறவினர்களிடமும், சகோதர வகையிலும் வருத்தங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பணியிலிருந்த அழுத்தங்கள் படிப்படியாக விலகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
தொழில் தொடர்பாக நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும். வியாபாரத்தில் படிப்படியாக சீரான வளர்ச்சி ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உதவிகள் தேடி வரும் தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
செவ்வாய் -
மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் உறுதியாகும். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். சுய தொழில் தொடங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் முற்றிலுமாக விலகும்.
புதன் -
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும். சொத்து தொடர்பான விஷயங்கள் ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும்.
வியாழன் -
குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதேசமயம் வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகும். தொழில் அல்லது வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் தொடர்பான செய்திகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
வெள்ளி -
மனசஞ்சலம் ஏற்படும். பயணங்களில் கவனம் வேண்டும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல் கூடாது. நிதானத்தோடு செயல்பட்டால் எளிதாக இந்த நாளைக் கடந்து செல்லலாம்.
சனி -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.
ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சனை இன்று முடிவுக்கு வரும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள். மகாவிஷ்ணுவுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
****************
சித்திரை -
பணத் தேவைகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும். மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும்.குடும்பத்தினர் தேவை அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள்.
குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கல்வியிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும்.கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய கடன் எதுவும் இப்போது வாங்க வேண்டாம். அலுவலகப் பணியில் கூடுதல் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பாராத வாய்ப்பாக புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு பணத் தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தியாகும். குடும்ப உறவுகள் பலப்படும். நன்மைகள் பலவாறாக நடக்கும், மாணவர்கள் புதிய கல்வி கற்கும் ஆர்வமும், புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வமும் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பண வரவு ஏற்படும்.
செவ்வாய் -
வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வழக்குகள் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
புதன் -
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.
வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள், சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் பண ஆதாயம் கிடைக்கும்.
வெள்ளி -
எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
சனி -
கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் தாமாக முன்வந்து உதவுவார்கள்.
ஞாயிறு -
அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுங்கள். ஸ்ரீவாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
****************
சுவாதி -
தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும் வாரம். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டாலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் தேவையில்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும்.
அலுவலகப் பணிகளில் கூடுதல் பணிச்சுமை இருந்தாலும் மிக எளிதாகவே அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். வரவும் செலவும் சமமாக இருக்கும், ஆனாலும் கணிசமான அளவில் சேமிப்பும் உண்டாகும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும், புதிய வாய்ப்புகள் ஏதும் வந்தால் கவனத்துடன் பரிசீலனை செய்த பிறகு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும், புத்திர பாக்கியம் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இதுவரை வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் -
திங்கள் -
நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாக குறையும்.
செவ்வாய் -
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் வரும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.
புதன் -
மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். தேவையில்லாத கற்பனைகள் மனதில் தோன்றும். மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருங்கள்.
வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.
வெள்ளி -
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சுவார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். வாழ்க்கைத் துணையிடம் தேவையில்லாத வாக்குவாதம் வைத்துக்கொள்ள வேண்டாம்.
சனி -
கடன் தொடர்பான பிரச்சினைகள் சமாதானம் ஆகும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும்.
ஞாயிறு -
வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். நண்பர்களால் ஒரு சிலருக்கு ஆதாயங்கள் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மனை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
**********
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago