மகர ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாத பலன்கள்; உத்தியோகத்தில் முன்னேற்றம்; பண வரவில் திருப்தி; காரியத்தில் வெற்றி! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
ராசியில் சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த மாதம் உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். மாத இறுதியில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடைமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.
பெண்களுக்கு நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாகப் பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும்.
திருவோணம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.
அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 4, 30, 31
*********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்