- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்:
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
12.08.2021 - அன்று சுக்கிர பகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.08.2021 - அன்று சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் ராசிநாதனின் சஞ்சாரத்தால் துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
» கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள், ஆகஸ்ட் 12 முதல் 18ம் தேதி வரை
» மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள், ஆகஸ்ட் 12 முதல் 18ம் தேதி வரை
வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.
தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருப்பங்கள் கைகூடும்.
பெண்களுக்கு ஆன்மிக நாட்டம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
கலைத்துறையினருக்கு வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். அரசியல்வாதிகள் சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி
பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.
***************************************************************************************************
விருச்சிகம்:
கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
12.08.2021 - அன்று சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.08.2021 - அன்று சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும்.
எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.
தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான முயற்சிகள் கை கொடுக்கும்.
குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். நிதானமாகச் செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். கலைத்துறையினர் தங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அரசியல்வாதிகள் தங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி
பரிகாரம்: திருப்புகழ் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்பக் கஷ்டம் தீரும்.
***************************************************************************************************
தனுசு:
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன் - அயனசயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
12.08.2021 - அன்று சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.08.2021 - அன்று சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.
குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு மற்றவர்கள் அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் உடனே செலுத்திவிடுவது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
பரிகாரம்: அம்பாளுக்கு முல்லை மலர் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
***************************************************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago