- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம்:
கிரகநிலை:
ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
12.08.2021 - அன்று சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.08.2021 - அன்று சூர்ய பகவான் தன வாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள்.
» மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள், ஆகஸ்ட் 12 முதல் 18ம் தேதி வரை
» தனுசு ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாத பலன்கள்; திடீர் பிரச்சினை; லாபம் உண்டு; வருமானம் உயரும்!
சுப செலவுகள் ஏற்படும். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும்.
உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதுர்யத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம் நீங்கும்.
பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். மாணவர்களுக்கு புத்திசாதுர்யம் வெளிப்படும். கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். முன்னோர் வழிபாடு மிகவும் முக்கியம். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லைகள் குறையும். உங்கள் பக்கமுள்ள நியாயம் வெளிப்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.
***************************************************************************************************
சிம்மம்:
கிரகநிலை:
ராசியில் செவ்வாய், புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயனசயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை உள்ளது.
12.08.2021 - அன்று சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.08.2021 - அன்று சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.
இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும்.
நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். கோபத்தால் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும்.
பெண்களுக்கு உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். பணவரவில் ஓட்டம் இருக்கும். அரசியல்வாதிகள் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அரசல் புரசலாக தங்களை கேலி பேசியவர்கள் கூட தங்களது தவறான போக்கை மாற்றிக் கொள்வர்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
பரிகாரம்: தினமும் சிவபுராணம் சொல்லி சிவபெருமானை வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.
***************************************************************************************************
கன்னி:
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயனசயன போக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
12.08.2021 - அன்று சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.
17.08.2021 - அன்று சூர்ய பகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். விருப்பங்கள் கைகூடும்.
நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தைக் குறைத்துப் பேசுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.
பெண்களுக்கு நிதானமாகப் பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் நல்லபடியாக வரும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாக தோன்றும்.
கலைத்துறையினருக்கு நிலம் வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்காலகட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
***************************************************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
43 mins ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago