மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 5 முதல் 11ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

05.08.2021 - அன்று புத பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாயின் பஞ்சம ஸ்தான சஞ்சாரத்தால் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும்.

எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். திட்டமிட்டபடி பயணங்கள் செல்ல முடியும். தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் வலிமையாக இருப்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அலுவலக வேலைகள் உடனே நடக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம்.

சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பெண்களுக்கு அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்துறையினருக்கு எதிர்பார்க்கும் பதவிகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

பரிகாரம்: குலதெய்வத்தை தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
**************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:

ராசியில் ராகு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

05.08.2021 - அன்று புத பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் சுக ஸ்தானத்தில் மிகப் பெரிய கூட்டணியில் இருக்கிறார். மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுகூலமாக இருக்கிறார்கள். நீங்கள் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும்.

மனதில் இருக்கும் கவலைகள் அகலும். சொத்து சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் இருக்கும். நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். அரசியல் துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறையக் கூடும்.

பரிகாரம்: மஹாலக்ஷ்மிக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

05.08.2021 - அன்று புத பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள்.

புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். பாராட்டு கிடைக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

பரிகாரம்: நடராஜரை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE