துலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்:

கிரக நிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:

இந்த வாரம் மிகுந்த தன்னம்பிக்கையுடையவரான தங்களுக்கு தெய்வ அனுகூலமும் சேர்ந்து இருப்பதால் சாதனைகள் புரிவீர்கள்.

மனதில் உற்சாகம் பிறக்கும். சில மாற்றங்கள் வந்து சேரும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலில் வியாபாரங்கள் கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டி வரும். பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டும். மக்கள் நலனிற்கு எந்தக் குறைபாடும் இருக்காது. தொழில் வெற்றியடையும் கவலை வேண்டாம்.

பெண்கள் கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிருங்கள். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும்.

மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. எதிர்கால படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
பரிகாரம்: கோளறு பதிகம் படிப்பது. சிவன் கோயிலுக்குச் சென்று சிவலிங்கத் திருமேனிக்கு இளநீர் அபிஷேகம் செய்வது எதிர்ப்புகளை வலுவிழக்கச் செய்யும். எடுத்த காரியத்தில் வெற்றியைத் தரும்.
--------------------------------------------------------------------------------

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:

இந்த வாரம் குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும்.

எதிர்பார்த்தபடி தனவரவு வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். உத்தியோகஸ்தர்கள் தூர தேசம் பயணம் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கவிருக்கிறது.

வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். தொழிலில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூரப் பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.

பெண்கள் தாய் மற்றும் தாய் வழி உறவினர்களின் மூலம் பாசத்தையும் அன்பையும் பெறுவீர்கள். அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இருக்காது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாகத் தலையிட வேண்டாம்.

அரசியல்வாதிகள் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். மாணவர்கள் படிப்பினில் சாதனைகள் புரிவர். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுற்றுலா சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - புதன் - வெள்ளி
பரிகாரம்: ஸ்ரீதுர்கையை வழிபடுவது நல்லது. மது மாமிசத்தை அறவே விட வேண்டும்.
------------------------------------------------------------------------------------
தனுசு:

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - அயனசயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

பலன்கள்:

இந்த வாரம் குடும்ப நிலைகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்தபடி பணம் கைக்கு வந்து செல்லும். ஆனால் சேமிப்பதற்கு முயற்சி செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

பேசப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்களில் சிக்கல்கள் விலகும். உத்தியோகஸ்தர்கள் நேர்மையான முன்னேற்றம் எந்த தடங்கல்கள் வந்தாலும் சாதிப்பீர்கள். உங்களது தெய்வ பலத்தால் அத்தனை எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தொழிலில் நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரம் அபிவிருத்தியாகும். பங்குதாரர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மை தரும்.
பெண்களுக்கு பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அரசல்புரசலாக தங்களை கேலி பேசியவர்கள் கூட அவர்களின் தவறான போக்கை மாற்றிக் கொள்வர்.

கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற நேரம் இது.

புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். கனவுகளில் நேரத்தை செலவிடாதீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன் - வெள்ளி
பரிகாரம்: முன்னோர்கள் வழிபாடும் சித்தர்கள் வழிபாடும் நன்று.
---------------------------------------------------------------------------------

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்