- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்:
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.
பலன்கள்:
இந்த வாரம் சுணக்க நிலை மாறும். வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பண விஷயங்கள் தாராளமயமாக இருக்கும். இருந்தபோதும் நீங்கள் படும் கஷ்டம் வெளியே தெரியாது.
நீங்கள் எப்போதுமே பிறர் கண்ணுக்கு சௌகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகக் காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக் கொள்ள மாட்டீர்கள்.
வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமுகமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும்.
தொழிலில் புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். புதிய கடனுக்கான முயற்சிகளை இக்கால கட்டத்தில் முடித்துக் கொள்ளுதல் நன்மை பயக்கும்.
பெண்கள் தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். வாய்ப்புகள் வந்து சேரும்.
அரசியல்வாதிகளுக்கு உங்கள் மேல் போட்டி மற்றும் பொறாமை கொண்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள்.
மாணவர்களுக்கு கல்வி விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
பரிகாரம்: திருச்செந்தூர் செந்திலாண்டவரை மனமுருக நினையுங்கள். அனைத்து காரியங்களும் தங்கு தடையின்றி நடைபெறும்.
-----------------------------------------------------
ரிஷபம்:
கிரகநிலை:
ராசியில் ராகு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.
பலன்கள் :
இந்த வாரம் நெடுங்காலமாக தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும்.
உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும். மனஸ்தாபங்கள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
தொழிலில் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும்.
கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் இருக்கும்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். மாணவமணிகளுக்கு புதியதாக கல்வி பயில மனம் ஆனந்தப்படும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
பரிகாரம்: லக்ஷ்மி நரஸிம்மரை வணங்குங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
மிதுனம்:
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
பலன்கள்:
இந்த வாரம் தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.
சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள் புதிய காரியங்களை செய்யத் துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.
தொழிலில் வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும்.
குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு.
அரசியல்வாதிகள் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். தந்தை, தாய் இவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். உங்களின் மனதை எல்லோரும் புரிந்து நடந்து கொள்வார்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - புதன்
பரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணுவை பூஜித்து வர நன்மையுண்டு. கோயில் திருப்பணிகளில் பங்கு பெறுங்கள். நன்மைகள் பயக்கும்.
-------------------------------------------------------------------------------------------
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago