- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
மகம் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும் வாரம். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
குடும்ப உறவுகள் பலப்படும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சொத்து சேரும் வாய்ப்பு உள்ளது. அல்லது பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டு.
» புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை)
» ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை)
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அலுவலகப் பணி காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டும். சகோதரர்களிடம் மனவருத்தம் ஏற்படும்படியாகச் செயல்பட வேண்டாம். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சற்று இழுபறியாக இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
வீண் அலைச்சல்கள் ஏற்படும்.தேவை இல்லாமல் மற்றவர் மீது கோபத்தைக் காட்ட வேண்டாம். குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது.
செவ்வாய்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். மன நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.
புதன் -
அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயங்கள் குறைவாகவே கிடைக்கும். ஆலய வழிபாடு செய்ய ஆர்வம் ஏற்படும். முக்கியமான நபர்களை சந்திப்பது ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும்.
வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
வெள்ளி -
கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வாகனம் மாற்றும் சிந்தனை உண்டாகும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் சுமுகமான முடிவு எட்டக் கூடிய நாளாக இருக்கும்.
ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய தகவல் கிடைக்கும். அது மனநிறைவைத் தருவதாக இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீஅபிராமி அன்னையை வணங்குங்கள். அபிராமி அந்தாதியை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*************
பூரம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அல்லது அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள், புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு சீரான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும்.
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும், புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமாக பயணங்கள் ஏற்படும். ஆதாயமும் உண்டாகும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். திருமணம் உறுதி செய்யப்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத ஒப்பந்தங்களும், மிகப்பெரிய அளவிலான பணவரவும் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பண வரவும் இருக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.
செவ்வாய்-
எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உதவிகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாக குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
வியாழன் -
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்க கூடிய நாள். அலுவலக வேலைகளில் கூடுதல் சுமை இருந்தாலும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் லாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.
வெள்ளி -
பொறுமை, நிதானம் மிக அவசியம். உணர்ச்சிவசப்பட்டு எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.
சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வீடு விற்பது வாங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ விஷ்ணு துர்கை வழிபாடு செய்யுங்கள். துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*********
உத்திரம் -
திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் வாரம்.
பணவரவு சரளமாக இருக்கும். ஒரு சில விஷயங்களில் தாமதமானாலும் முடிவுகள் சாதகமாக இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். உறவினர்கள் வருகை உண்டாகும்.
கவலை தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினை முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகப் பணியில் சகஜ நிலை நீடிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் காண்பார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகக் கூடிய நாளாக இருக்கும். பணவரவு சரளமாக இருக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகப் பணிகள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
செவ்வாய்-
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
புதன்-
எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தினருடன் ஒத்துழைத்துச் செல்லுங்கள். எவரிடமும் கோபத்தை காட்டாதீர்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் தேவையற்ற வாக்குவாதங்களைச் செய்ய வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.
வெள்ளி-
அத்தியாவசிய பயணங்கள் தவிர மற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.
சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். நெருங்கிய உறவினர்களிடம் ஒரு சில உதவிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இன்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்று சுமுகமான முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீசூரிய பகவானை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago