அஸ்த நட்சத்திரமும் விநாயகரும் எலி வடிவமும்!  உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 19

By செய்திப்பிரிவு

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்


சென்ற வாரம் உத்திரம் நட்சத்திரம் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் நாம் ஹஸ்தம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.

ஹஸ்தம்
ஹஸ்தம் நட்சத்திரம் மேல் வானத்தில் கன்னி ராசி மண்டத்தில் காணப்படும் நட்சத்திரம். நாம் வெறும் கண்ணில் பார்க்கும்போது உள்ளங்கை போலவும், ஒற்றை மயில் பீலி போலவும் காணப்படும். ஹஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். புதன் உச்சம் பெறும் நட்சத்திரம் ஹஸ்தம். ஆகவே கன்னி ராசிக்குரிய மாதமான புரட்டாசியில் புதனின் அதிபதியான பெருமாள் வழிபாடு மிகவும் வலிமையும் எண்ணற்ற நன்மைகளையும் தரக்கூடியது.

விநாயகரும் எலியும்- தாரை ரகசியம்

விநாயகரின் ஜென்ம நட்சத்திரம் ஹஸ்தம். அதன் சம்பத்து தாரைகள் முறையே சித்திரை, அவிட்டம் மற்றும் மிருகசீரிஷம் ஆகும். சித்திரை நட்சத்திரத்திற்கு ஆங்கிலத்தில் ஸ்பைகா என்று பெயர் உண்டு.

இந்த நட்சத்திரம் வானில் கருநீல நிறத்தில் எலி போன்று காட்சி அளிக்கும். கீழே இருக்கும் சித்திரை நட்சத்திர வடிவத்தையும், விநாயகரின் காலடியில் அமர்ந்து இருக்கும் எலியின் வடிவத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

சித்திரை நட்சத்திரமானது, அஸ்தம் நட்சத்திரத்திற்கு சம்பத்து தாரையாக வருவதால், சித்திரை நட்சத்திரத்தின் வடிவான எலியின் உருவம் எப்பொழுதும் விநாயகருக்கு மிக அருகிலேயே வாகனமாக வைக்கப்பட்டு இருக்கிறது.

உள்ளங்கையில் லட்சுமி - தாரை சூட்சுமம்

உள்ளங்கை என்பது சம்ஸகிருதத்தில் "ஹஸ்தம்" என்று பொருள்படும். ஹஸ்த நட்சத்திரத்தில் சுக்கிரன் நீச்சமானால் விரல்களைக் குறிக்கும் புதன் உச்சம். சுக்கிரனின் அம்சம் மஹாலட்சுமி. புதனின் அம்சம் விஷ்ணு ஆகும்.

மூடி இருக்கும் உள்ளங்கையில் மஹாலட்சுமி அம்சமான சுக்கிரன் நீச்சம். அதேசமயம் புதனின் அம்சமான விரல்களை நீட்டி புதன் உச்சநிலையில் இருக்க, உள்ளங்கையைத் தெளிவாக பார்க்கமுடியும். இது சுக்கிரனின் நீச்சபங்கத்தை குறிக்கும். அதனால் தான் சுக்கிரனின் அம்சமான மஹாலட்சுமி உள்ளங்கையில் வாசம் செய்கிறாள் என்கிறார்கள்.

எனவே தான் உத்திரத்தில் பிறந்த லட்சுமி தேவி தனது சம்பத்து தாரை வடிவான ஹஸ்தத்தை காட்டியபடி இருப்பார்.

உத்திரம், உத்திராடம், கார்த்திகை நட்சத்திர நண்பர்கள் ஹஸ்த நட்சத்திர வடிவான உள்ளங்கையை அதிகாலையில் தினமும் பார்த்து வணங்கி வர, சகல செல்வங்களும் கிட்டும்.

ஹஸ்தம், உத்திராடம், கார்த்திகை திருவோணம், ரோகிணி நட்சத்திர நண்பர்கள் உள்ளங்கையை அதிகாலையில் தினமும் பார்த்து வணங்கி வர, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் நட்சத்திர நண்பர்கள் ஹஸ்த நட்சத்திர வடிவான உள்ளங்கையை அதிகாலையில் தினமும் பார்த்து வணங்கி வர, சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும்.

மகம், மூலம், அஸ்வினி நட்சத்திர நண்பர்கள் ஹஸ்த நட்சத்திர வடிவான உள்ளங்கையை அதிகாலையில் தினமும் பார்த்து வணங்கி வர, எடுத்த காரியம் சிக்கலின்றி ஸித்தியாகும்.

பூசம், உத்திரட்டாதி, அனுஷம் நட்சத்திர நண்பர்கள் ஹஸ்த நட்சத்திர வடிவான உள்ளங்கையை அதிகாலையில் தினமும் பார்த்து வணங்கி வர, தோஷம் போக்கி நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும்.

தன்வந்திரியும் அட்டைபூச்சியும்

நாம் ஆயுர்வேத மருத்துவராக வழிபடும் தன்வந்திரி அவதரித்த நட்சத்திரம் ஐப்பசி அஸ்தம். இவர் பாற்கடல் கடையும்போது அமிர்தத்தை கலசத்தில் கொண்டு வந்ததாக புராணம் சொல்கிறது. இவரது கையில் ஒரு அட்டைப்பூச்சி இருக்கும். அந்த அட்டைப்பூச்சி ஆயில்ய நட்சத்திர வடிவம். ஆயில்ய நட்சத்திரம் என்பது அஸ்தம் நட்சத்திரத்தின் சாதக தாரையாகும். பொதுவாக சாதக தாரை வடிவங்கள் தோஷம் மற்றும் நோய் போக்க உதவுகிறது.

அந்தக்காலத்தில் ரத்தக்கட்டிகளைக் கரைக்க, ரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. புற்றுக்கட்டிகளுக்கு சிகிச்சை தரவும் அட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இவர் கையில் அமிர்தகலசம் இருப்பதால், இவர் ஆயுளைக் காக்க உதவும் கடவுளாக போற்றப்படுகிறார்.

அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திர நபர்கள் தன்வந்திரியை வணங்கி, தீராத நோய்கள் விலக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். நோய் நீங்கி நல்லபலன் உண்டாகும்.

இதுவரை ஹஸ்தம் நட்சத்திரம் பற்றி அறிந்தோம். இனி வரும் கட்டுரையில் சித்திரை நட்சத்திரம் பற்றி அறியலாம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்