- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரக அமைப்பு உள்ளது.
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள்.
» சிம்ம ராசி அன்பர்களே! ஜூலை மாத பலன்கள்; வீடு வாங்கும் சூழல்; பண வரவு உண்டு; சுணக்க நிலை மாறும்!
முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும்.
கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்பச் செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளைக் கேட்பார்கள்.
அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். பெண்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும்.
கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும்.
பரிகாரம்: ஸ்ரீமகாகணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
**********
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
கிரகநிலை:
ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) என கிரக அமைப்பு உள்ளது.
இந்த வாரம் தனாதிபதி புதனின் சஞ்சாரத்தின் மூலம் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். சூரியன் சஞ்சாரத்தால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.
அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு செயல் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும்.
பரிகாரம்: துர்கையை வணங்கி வருவதால் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.
*****************
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக அமைப்பு உள்ளது.
இந்த வாரம் அஷ்டமத்து சனி நடக்கிறது. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்குப் பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.
அவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும்போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.
பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் சிறிது சிரமம் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
****************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago