- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
02-07-21 அன்று காலை 08:14 மணிக்கு புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-07-21 அன்று காலை 10:20 மணிக்கு சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-07-21 அன்று விடியற்காலை 02:54 மணிக்கு புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-07-21 அன்று காலை 06:01 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
» மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; ஜூலை 1 முதல் 7ம் தேதி வரை
» துலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; ஜூலை 1 முதல் 7ம் தேதி வரை
பலன்கள்:
இந்த மாதம் செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும்.
மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்தக் காரியங்களில் ஈடுபட்டாலும் மனத் தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம், கவனம் தேவை.
குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.
பெண்களுக்கு மனத்தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். வீண் அலைச்சல் உண்டாகலாம்.
மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன் செயல்படுவீர்கள்.
கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும்.
அஸ்வினி:
இந்த மாதம் கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
பரணி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படுவார்கள்.
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் வேலையில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு அரளிப்பூ சாற்றி அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15
*********************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago