மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; ஜூன் 24 முதல் 30ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

கிரகநிலை:
ராசியில் சனி(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.

எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்ளும் மகர ராசியினரே!

இந்த வாரம் வரவைப் போலவே செலவும் இருக்கும். கவலைகள் நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைச் சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள்.

குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவும் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாக்குவன்மையால் நன்மை உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். மாணவர்கள் வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.

பரிகாரம்: ஆஞ்சநேயரை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரியத் தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.
******************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி(வ) என கிரக அமைப்பு உள்ளது.

மனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகம் பெற்ற கும்ப ராசியினரே!

இந்த வாரம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணத்தேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். அதேசமயம், செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் தலைதூக்கும். அவற்றை லாகவமாகக் கையாண்டு சமாளிப்பீர்கள்.

கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயங்களைப் பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். அரசியலில் உள்ளவர்கள் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் குலதெய்வ வழிபாடு செய்து வர வாழ்வில் ஏற்றம் ஏற்படும்.
******************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரக அமைப்பு உள்ளது.

தூய உள்ளம் படைத்த மீன ராசியினரே!

இந்த வாரம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். ஆனால் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாகப் பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும்.

பெண்கள் கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களைப் படிப்பது நல்லது.

பரிகாரம்: சிவன் கோயிலுக்குச் சென்று நவக்கிரகங்களில் இருக்கும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். முடிந்தால் மஞ்சள் வஸ்திரம் அணிவிக்கலாம்.
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்