அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 21 முதல் 27ம் தேதி வரை) 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்தம் -

அதிக நன்மைகள் ஏற்படும் வாரம். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

எதிர்பார்த்து காத்திருந்த பணம் இந்த வாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கிய பிரச்சினைகள் ஒரு சிலருக்கு வந்து போகும். ஆனாலும் கவலைப்படும்படியான பாதிப்புகள் இருக்காது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சகோதர சகோதரிகளிடம் இணக்கமாக இருக்க வேண்டும்.

அலுவலகப் பணியில் இயல்பான நிலையே இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். பெண்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும்.

கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் நண்பர்களால் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். தொழில் தொடர்பான முக்கிய நபரை சந்திப்பதால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள்.
.
செவ்வாய் -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கும்.

வியாழன் -
எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமை காப்பது நல்லது. பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற விவாதங்கள் செய்ய வேண்டாம்.

வெள்ளி -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக புதிய லாபம் தரக்கூடிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் மனநிறைவைத் தரும். அசையாச் சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பீர்கள்.

சனி -
குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த செலவுகளும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும்.

ஞாயிறு -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரம் வளர்ச்சி அடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மஹாவிஷ்ணு வழிபாடு செய்யுங்கள். மகா விஷ்ணுவுக்கு துளசி மாலை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
******************

சித்திரை -

பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

எதிர்ப்புகள் குறையும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் வந்துபோகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். சகோதர சகோதரிகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

நெருங்கிய நண்பர்களால் தேவையான பண உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். இப்போது இருக்கும் வியாபாரத்தையே மேலும் விரிவுபடுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு பேச்சுவார்த்தைகள் தொடரும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு.

இந்த வாரம் -

திங்கள் -
தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். வியாபாரம் வளர்ச்சி அடையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமான முடிவுக்கு வரும்.

செவ்வாய் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையைச் செய்ய வேண்டியது வரும். வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும்.

புதன் -
நெருக்கடி தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சரியாகச் செய்து முடிப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு ஏற்படும். ஒரு சிலருக்கு சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களால் வியாபார ஆதாயம் கிடைக்கும்.

வெள்ளி -
தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சனி -
அதிக நன்மைகள் நடைபெறும். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். அவர்களுக்கான மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து விடுவீர்கள். எதிர்காலம் கருதி ஒரு சில திட்டங்களை குடும்பத்தாருடன் கலந்து ஆலோசிப்பீர்கள்.

ஞாயிறு -
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடையும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிக்கும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்வதும் நன்மைகளை ஏற்படுத்தித்தரும்.
***************

சுவாதி -

அதிக முயற்சிகள் இல்லாமலேயே எல்லா வேலைகளும் சுமுகமாக நடைபெறும்.

கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் முன்னேற்றமான தகவல்களாகவே கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். திருமணமாகி நீண்ட நாட்களாக புத்திரபாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

சகோதரர்களில் ஏற்பட்டிருந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் இப்போது முடிவுக்கு வரும். ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும்.

தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வணிகத்தில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

செவ்வாய் -
பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். உடலில் அசதி சோர்வு ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். மற்றவர்களால் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் ஆளாவீர்கள். எனவே அமைதியாக இருப்பது நல்லது.

புதன் -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசனை நடக்கும்.

வியாழன் -
எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுபமாக முடிவுக்கு வரும்.

வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் ஏற்படும்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய விஷயங்கள் முடிவாகும்.

சனி -
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது. செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். உடல் நலத்தில் சிறிய அச்சுறுத்தல் தோன்றி மறையும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகளும் ஏற்படும்.

ஞாயிறு -
இதுவரை வராமல் இருந்த பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். சகோதரர்கள் சொத்துப் பிரச்சினையில் உங்களுக்கு இணக்கமாக இருப்பார்கள். புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். சக ஊழியர்கள் அல்லது நண்பர்கள் மூலமாக ஆதாயம் தரக்கூடிய வியாபார விஷயம் ஒன்று கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மகா சக்தி மாரியம்மனை வணங்குங்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும்.
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்