- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அஸ்தம் -
முயற்சிகளால் வெற்றிகளைக் காண வேண்டிய வாரம்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நெருக்கடிகள் தோன்றினாலும் சமாளிக்கும் ஆற்றல் இருக்கும். நிதானத்தோடு எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட வேண்டும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும்.
» மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 7 முதல் 13ம் தேதி வரை)
» புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 7 முதல் 13ம் தேதி வரை)
தாய்வழி உறவுகளால் இதுவரை ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் அகன்று மீண்டும் ஒற்றுமை ஏற்படும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும். இடம் மாற்றம் ஏற்பட்டால் தாராளமாக மாறிக்கொள்ளுங்கள்.
தொழிலில் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
உதவிகள் தேடி வரும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வருமானம் திருப்திகரமாக இருப்பதால் மனநிம்மதி உண்டாகும். புதிய பணிகளை ஏற்றுச் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
செவ்வாய் -
ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். மன நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
புதன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும் திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவு கிடைக்கும்.
வெள்ளி -
உற்சாகமான நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாகச் செய்து முடித்து விடுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
சனி -
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோம்பல் அதிகரிக்கும். தேவையற்ற எரிச்சல் குழப்பம் உண்டாகும். சம்பந்தமில்லாத விஷயங்களைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய தகவல் கிடைக்கும். அது மனநிறைவைத் தருவதாக இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
விநாயகர் வழிபாடு செய்யுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
*****************
சித்திரை -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். தாயாரின் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் அகலும்.
அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம் வேறு நிறுவனங்களில் இருந்தும் அழைப்புகள் வரும். அப்படியான அழைப்புகள் கிடைத்தால் தாராளமாக அந்தப் பணியை ஏற்றுக் கொள்ளுங்கள்.
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை காணக் கூடிய வாரமாக இருக்கும்.
பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உறுதி செய்யப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடிய வாரமாக இருக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் -
திங்கள் -
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அவர்களுடைய எதிர்காலம் கருதி ஒரு சில முதலீடுகளைச் செய்ய எண்ணம் தோன்றும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
செவ்வாய் -
எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உதவிகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
புதன் -
செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வரவும் செலவும் சமமாக இருக்கும். பராமரிப்புப் பணிகளை செய்ய வேண்டியது வரும். விலை உயர்ந்த பொருட்களைக் கவனமாகக் கையாள வேண்டும்.
வியாழன் -
எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். அலுவலக வேலைகளில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.
வெள்ளி -
பொறுமை நிதானம் மிக அவசியம். உணர்ச்சிவசப்பட்டு எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். அலுவலக வேலைகளில் அதிக கவனம் செலுத்துங்கள். செய்த வேலையை மீண்டும் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும்.
சனி -
பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியாக பயணங்கள் ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பர்கள் மூலமாக சில உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ துர்கை வழிபாடு செய்யுங்கள். துர்கை மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
**************
சுவாதி -
நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ளும் வாரம்.
குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறைந்துவிடும். நெருங்கிய உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
அலுவலகப் பணியில் சகஜ நிலையே நீடிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.
திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வியில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்துக் கூற வேண்டாம். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்தினருடன் வீண் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும்.
செவ்வாய்-
தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு அரசின் உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். இல்லத்தில் சுபகாரிய விஷயங்கள் பற்றிய விஷயங்கள் பேசி முடிக்கப்படும்.
புதன் -
அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். அரசு வழி நிர்பந்தங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சற்று தள்ளிப் போகும். செலவுகள் அதிகமாக இருக்கும்.
வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.
வெள்ளி -
கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது. வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.
சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய நபர்கள் அறிமுகமாவார்கள்.
ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்று சுமுகமான முடிவுக்கு வரும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
முருகப் பெருமான் வழிபாடு செய்யுங்கள். முருகனுக்கு செவ்வரளி மாலை கொண்டு வணங்குவது நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
***********************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago