மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் (மே 31 முதல் ஜூன் 6ம் தேதி வரை) 

By செய்திப்பிரிவு

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -

நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சச்சரவுகள் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்திருந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் தீரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கும், உணவுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். அரசு நெருக்கடிகள் விலகும். வங்கியின் உதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும், நிலத் தரகர்களுக்கும் எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைத்து வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் உறுதியாகும். வேலையில்லாத பெண்களுக்கு வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
சுபச் செலவுகள் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினையில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் இயல்பான நிலையே இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பண உதவி கிடைக்கும்.

செவ்வாய் -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள்.

புதன் -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வேலைவாய்ப்பு பற்றிய தகவல் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

வியாழன் -
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

வெள்ளி -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். சுப விசேஷங்கள் தொடர்பான விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும்.

சனி -
பராமரிப்புச் செலவுகள் கூடும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். வீடு மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களிடம் தேவையில்லாத விவாதங்களைச் செய்ய வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியது வரும்.

ஞாயிறு -
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ விநாயகர் வழிபாடு செய்யுங்கள். விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும்.
*************************

பூராடம் -

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். தேவைக்கேற்ற பணவரவு இருக்கும்.

தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி உறவுகளிடம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது வேலை பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவருவார்கள். உறவினர் பகை மாறும். தாமதப்பட்டு வந்த திருமணம் இப்போது உறுதியாகும். திருமணத் தேதி குறிக்கப்படும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள் -
நீண்டநாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

செவ்வாய் -
வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற சர்ச்சைகள் தோன்றும். பொறுமை அவசியம். நிதானமாக எந்தச் செயலையும் செய்ய வேண்டும்.

புதன் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுகள் மனதிற்கு நிம்மதி தரும். வேறு வேலைக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் நிறைவேறும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

வியாழன் -
மகிழ்ச்சியான செலவுகள் ஏற்படும். பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலுக்கு அரசு உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாரத அளவுக்கு தாராளமாக இருக்கும். சொத்து வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். முயற்சிகள் எதுவாக இருந்தாலும் முழுமையான வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும்.

சனி -
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி நிலையை எட்டும். எதிர்பார்த்த பணம் எதிர்பார்த்த மாதிரியே கிடைக்கும்.

ஞாயிறு -
வீண்செலவுகள் ஏற்படும். நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும். உடல்நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீஆண்டாள் அன்னையை வணங்குங்கள். ஆண்டாள் அருளிய திருப்பாவை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் நடக்கும்.
****************

உத்திராடம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றியைக் காண்பீர்கள்.

முக்கியமான விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சொத்து விஷயங்களில் வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி தராதீர்கள்.

கடன் வாங்குவது, கடன் கொடுப்பது அறவே கூடாது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இயல்பான நிலையே இருக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் எண்ணம் உடையவர்கள் இந்தவாரம் அந்த முயற்சியில் ஈடுபடலாம். அது தொடர்பாக நல்ல தகவல் இந்த வாரத்திலேயே உறுதியாகும்.

தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். சிலருக்கு கடன் பிரச்சினைகள் நெருக்கடி தருவதாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு சொத்தில் பங்கு, வேலை போன்றவை கிடைக்கும்.

திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தினரிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும். மாணவர்கள் அமைதியான சூழலை உணர்வார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். நெருங்கிய உறவினர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டியது வரும்.

செவ்வாய் -
நீண்ட நாளாக வராமலிருந்த தொகை இன்று கைக்கு வந்து சேரும். வழக்கு தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

புதன் -
தேவையற்ற சர்ச்சையில் சிக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது பிரச்சினையை உண்டுபண்ணும். சிறிய விஷயம் கூட பெரிய பிரச்சினையாகத் தெரியும். சுய கட்டுப்பாடு தேவை.

வியாழன் -
சிறப்பான நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடியதாக இருக்கும். வேலையில் இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். வியாபாரத்தில் பொருட்கள் விறுவிறுப்பாக விற்பனையாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

சனி -
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.

ஞாயிறு -
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகிப் போகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். வேலைக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ முருகப் பெருமானை வழிபாடு செய்வது மிகுந்த நன்மையைத் தரும். நினைத்தது நிறைவேறும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்