அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் (மே 31 முதல் ஜூன் 6ம் தேதி வரை) 

By செய்திப்பிரிவு

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -

நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.

குடும்பத்தில் இயல்பான சூழ்நிலை இருக்கும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்தவேண்டும். புதிய வாய்ப்புகள் அல்லது ஒப்பந்தங்கள் எதுவாயினும் நிதானத்தோடு பொறுமையாக அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து அதன் பின் ஏற்கவேண்டும். அவசரப்பட்டால் சிக்கல்களை சந்திக்க வேண்டியது வரும்.
பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சொத்து சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உறுதியாகும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் போடுவதாக இருந்தால் சமரசங்களுக்கு இடம் கொடுக்காமல் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுங்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தேடிவரும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமாகத் தீரும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும்.

செவ்வாய் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.

புதன் -
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். லாபம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். சகோதர வகை உறவுகளால் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

வியாழன் -
தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும். எதிலும் தலையிட வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் கருத்து கூற வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களைப் பற்றி குறை கூறிப் பேச வேண்டாம். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம்.

வெள்ளி -
வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். செய்தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

சனி -
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார நிமித்தமாக ஏற்படும் சந்திப்புகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தினார் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக பேசி வந்த வியாபாரம் இன்று வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகளும், எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்.சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை அம்மன் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்..தேவைகள் பூர்த்தியாகும், நினைத்தது நடக்கும்.
***********************
பரணி -

அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும்.

எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மனதிற்கு திருப்தி தருவதாக இருக்கும்.

சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வியாபாரத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். ஒருசிலருக்கு புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சில சங்கடங்கள் இன்று சுமுகமாக தீரும்.

செவ்வாய் -
நண்பர்கள் மூலமாக எதிர்பாராத உதவி கிடைக்கும். அலுவலகப் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்கும் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகள் கிடைக்கும். கடன் நெருக்கடிகள் முடிவுக்கு வரும்.

புதன் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். மன நிறைவு உண்டாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். ஒப்பந்தங்கள் போடும் வாய்ப்பு உள்ளது.கமிஷன் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

வியாழன் -
அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு உண்டாகும். அலுவலகப் பணியில் அதிகப்படியான அழுத்தங்கள் ஏற்படும். வியாபார விஷயங்களில் நிதானம் தேவை. தொழில் தொடர்பான பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வெள்ளி -
எந்த விஷயத்திலும் அதிக கவனம் வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆடம்பரச் செலவுகளை செய்யாமல் இருப்பது நல்லது.

சனி -
மனக் கவலைகள் தீரும்படியாக நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

ஞாயிறு -
நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் பேசித் தீர்க்கப்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
வாராஹி அம்மனை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். பிரச்சினைகள் தீரும்.
***************

கார்த்திகை -

நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

ஆனாலும் மனதில் சிறிய அளவிலான குழப்பங்களும், மன உளைச்சலும் ஏற்படும். உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் அதிகப்படியான பணிச்சுமை ஏற்படும்.

தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும்.

சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக முடியும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒரு சில நல்ல வாய்ப்பு நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். மனதளவில் சற்று தளர்வு ஏற்படும். எடுத்துக்கொண்ட வேலைகள் முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு தேக்க நிலை ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையும்.

செவ்வாய் -
வியாபாரத்தில் ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழிலில் எதிர்பாராத உதவி ஒன்று கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.

புதன் -
இல்லத்தில் சுபகாரியப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆதாயம் பெருகும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். ஒப்பந்தங்கள் மனநிறைவைத் தருவதாக இருக்கும். தேவையான உதவிகள் தொழிலுக்குக் கிடைக்கும்.

வியாழன் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுவதால் அதிகம் உழைக்க வேண்டியது வரும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள்.

வெள்ளி -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது வசூலாகும். திருமண முயற்சிகள் முடிவாகும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான வாய்ப்பு ஏற்படும்.

சனி -
அலுவலகத்தில் உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி கேட்டு தொல்லை தருவார்கள். ஆலய வழிபாடு செய்து மனதை அமைதிப்படுத்துங்கள்.


ஞாயிறு -
தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உத்தியோகம் தொடர்பாக நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
விநாயகர் வழிபாடு செய்யுங்கள். விநாயகர் அகவல் படியுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்