சிம்ம ராசி அன்பர்களே! முயற்சியில் வெற்றி; பண வரவு; மன வருத்தம் நீங்கும்; ஜூன் மாத பலன்கள்

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - உத்தராயனம் - வஸந்த ரிது - வைகாசி மாதம் 17ம் தேதி பின்னிரவு 18ம் தேதி முன்னிரவு - அன்றைய தினசுத்தி அறிவது க்ருஷ்ணபக்ஷ சஷ்டி - அவிட்டம் நட்சத்திரம் - மாஹேந்திர நாமயோகம் - கரஜி கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12.00 மணிக்கு கும்ப லக்னத்தில் ஜூன் மாதம் பிறக்கிறது.

ஜூன் மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை:
லக்னம் - அவிட்டம் 4ம் பாதம் - செவ்வாய் சாரம்
சூர்யன் - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சந்திரன் - அவிட்டம் 2ம் பாதம் - செவ்வாய் சாரம்
செவ்வாய் - புனர்பூசம் 3ம் பாதம் - குரு சாரம்
புதன்(வ) - ரோகிணி 1ம் பாதம் - சந்திரன் சாரம்
குரு(அசா) - சதயம் 1ம் பாதம் - ராகு சாரம்
சுக்கிரன் - ம்ருகசீர்ஷம் 3ம் பாதம் - செவ்வாய் சாரம்
சனி (வ) - திருவோணம் 1ம் பாதம் - சந்திரன் சாரம்
ராகு - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
கேது - அனுஷம் 4ம் பாதம் - சனி சாரம்


************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - சப்தம ஸ்தானத்தில் குரு(அசா) - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக நிலை அமைந்திருக்கிறது.
இம்மாதம் 03ம் தேதி - வியாழக்கிழமை அன்று செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 10ம் தேதி - வியாழக்கிழமை அன்று புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி - செவ்வாய்கிழமை அன்று சூர்யன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 23ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிரன் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த மாதம் முயற்களுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். நல்லதா? கெட்டதா? என்று தெரியாத மனநிலை உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் தொடர்பான பயணம் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணையால் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும்.

பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். எந்தஒரு வேலையிலும் வேகத்தைக் காண்பீர்கள். செலவு குறையும்.
கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். காரியங்கள் அலைச்சலுக்குப் பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாகக் கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களைக் கையாளும்போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்துச் செய்வது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும்.

மகம்:
இந்த மாதம் காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தைக் கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காண முற்படுவீர்கள். மனத் தடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

பூரம்:
இந்த மாதம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும்போது கவனமாகப் பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் திடீர் கோபம் ஏற்படலாம். மேலும் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளிப் போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும்.

பரிகாரம்: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்