- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
அஸ்வினி -
நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணவரவு மனநிறைவைத் தரும். முயற்சிகளில் எதிர்பாராத அளவிற்கு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
» தோஷங்கள்... பரிகாரங்கள்! - 5
» மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள் - மே 13 முதல் 19ம் தேதி வரை
பெற்றோர் மற்றும் குடும்பத்தார் உடல்நலமும் திருப்திகரமாக இருக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அலுவலக வேலையில் இயல்பான நிலை இருக்கும். ஒரு சிலருக்கு சேவை சார்ந்த பணி செய்ய வாயப்பு கிடைக்கும் தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட நல்ல விஷயங்கள் முடிவாகும் . சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி பெறுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் பற்றிய பேச்சு வார்த்தைகள் ஏற்படும்.
இந்த வாரம் -
திங்கள்-
கவனமாக செயல்படுங்கள். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். வியாபாரிகள் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீண் பயத்தைத் தவிர்க்க வேண்டும்.
செவ்வாய்-
எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயத்தில் ஆதாயம் கிடைக்கும். செலவுக்கேற்ற வருமானம் கிடைக்கும்.
புதன்-
எண்ணங்கள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நன்மைகள் நடக்கும். வேலை தேடுதல் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
வியாழன்-
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். எதிலும் அவசரப்படக்கூடாது. வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.
வெள்ளி-
நெருக்கடிகள் விலகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நடைபெறும். எதிர்பார்த்த தொழில் வாய்ப்பு கிடைக்கும். சொத்துகள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.
சனி-
நெருக்கமானர்களுக்கு பண உதவிகள் செய்ய வேண்டிய நிலை வரும். தொழில் தொடர்பான சந்திப்புகளில் இழுபறி நீடிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் மேலும் தள்ளிப்போகும். ஆரோக்கியப் பிரச்சினைகளில் முன்னேற்றம் காணலாம். மருத்துவச் செலவுகள் குறையும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதன் மூலமாக செலவுகள் ஏற்படும்.
ஞாயிறு-
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும். சுப விசேஷங்கள் முடிவாகும். தாமதப்பட்டு வந்த திருமணத்திற்கு இன்று நல்ல முடிவு ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீஹயக்கிரீவர் சுவாமியை வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
*********
பரணி -
நன்மைகள் நடக்கும் வாரம். பொருளாதாரத் தடை இருக்காது, தேவையான பணவரவு சரளமாக இருந்துகொண்டே இருக்கும்.
குடும்பத்தினர் ஒத்துழைப்போடு புதிய வியாபாரம் செய்வதற்கு முற்படுவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த முக்கியமான தகவல் ஒன்று இந்த வாரம் கிடைக்கும். மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.
பணியில் சற்று நெருக்கடி அதிகமாக ஏற்படும். தொழில் சீராக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். புதிய வியாபாரம் தொடங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உண்டு.
பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு புதிய நண்பர்கள் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
செவ்வாய்-
பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பணவரவு சரளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
புதன்-
திட்டமிட்டு செயல்பட்டு பல காரியங்களைச் சாதிக்கும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக ஏற்படும் சந்திப்புகள் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய தொலைபேசி வழித் தகவல் கிடைத்து மன நிம்மதி பெறுவீர்கள்.
வியாழன்-
எடுத்துக் கொண்ட அனைத்துப் பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். அலுவலகப் பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் சிறு தூர பயணத்தால் ஆதாயம் உண்டு.
வெள்ளி-
தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து விடவேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சனி-
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். வங்கியில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். முக்கியமான நபர்களின் சந்திப்பு ஏற்படுவதால் மன மகிழ்வு ஏற்படும்.
ஞாயிறு-
பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. நிதானமான செயல்பாடுகள் அவசியம் தேவை. குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீமகாலட்சுமி அன்னையை வணங்குங்கள். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
*************
கார்த்திகை -
எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நீங்கள் விரும்பிய வண்ணமே நிறைவேறும்.
பணவரவு தாராளமாக இருக்கும். ஒரு சில விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவார்கள்.
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த சலுகைகளும், உதவிகளும் கிடைக்கும். பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள்-
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
செவ்வாய்-
பணவரவு சரளமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.
புதன்-
தாமதப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சிறிய அளவிலான சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும். பெண்களுக்கு முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று தீர்வதற்கு வழி கிடைக்கும்.
வியாழன் -
குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வாகன மாற்றுச் சிந்தனை ஏற்படும். மனதில் கடந்த சில நாட்களாக இருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும் புதிய வியாபார முயற்சிகளில் ஈடுபட வழி வகைகள் கிடைக்கும்.
வெள்ளி-
எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சனி-
குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும். நண்பர்களிடமும் அக்கம்பக்கத்தினருடனும் கவனமாக இருக்கவேண்டும். பேசுகின்ற வார்த்தைகளில் கவனம் தேவை.
ஞாயிறு-
குடும்பத்தினரின் எதிர்காலத்திற்காக ஒரு சில திட்டங்களைச் செயல்படுத்த முயற்சி எடுப்பீர்கள். சொத்துகள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமான் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 mins ago
ஜோதிடம்
24 mins ago
ஜோதிடம்
55 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago