விசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (மே 3 முதல் 9ம் தேதி வரை)

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விசாகம் -

நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணவரவு மனநிறைவைத் தரும். முயற்சிகளில் எதிர்பாராத அளவிற்கு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்புகள் முழுமையான குணம் ஏற்படும். தந்தையின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். சகோதரர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.

கடன் தொடர்பான பிரச்சினைகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அலுவலக வேலையில் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும். சக ஊழியர்களே உங்களுக்கு மறைமுக தொல்லைகள் தருவார்கள். உயரதிகாரிகள் தேவையில்லாத நெருக்கடி தருவார்கள்.

தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட நல்ல விஷயங்கள் நடக்கும். சுய தொழில் தொடங்கும் முயற்சியில் இருக்கும் பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். விரும்பிய செயல்களை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும்.

செவ்வாய்-
எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வியாபார விஷயத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். செலவுகள் இருந்தாலும் அதற்கேற்ற வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

புதன்-
எண்ணங்கள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன்-
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள் எதிலும் அவசரப்படக்கூடாது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். கடன் தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

வெள்ளி-
அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நடைபெறும். எதிர்பார்த்த தொழில் முதலீடு கிடைக்கும். சொத்துகள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சனி-
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் மேலும் தள்ளிப்போகும். ஆரோக்கியப் பிரச்சினைகளில் முன்னேற்றம் காணலாம். மருத்துவச் செலவுகள் குறையும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதன் மூலமாக செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு-
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும். சுப விசேஷங்கள் முடிவாகும். தாமதப்பட்டு வந்த திருமணத்திற்கு இன்று நல்ல முடிவு ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
தட்சிணாமூர்த்தி குரு பகவானை வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். குரு கவசம் பாராயணம் செய்யுங்கள். மேலும் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
**************

அனுஷம் -

நன்மைகள் நடக்கும் வாரம். வரவும் செலவும் சமமாகவே இருக்கும்.

எனவே சிக்கனம் அவசியம் தேவை. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல் நலக் கோளாறுகள் இருந்துகொண்டே இருந்திருக்கும். இனி உடல்நல பாதிப்பு என்பதே இல்லாமல் போகும். பொருளாதாரத்திற்கு இனி தடை இருக்காது. தேவையான பணவரவு சரளமாக இருந்துகொண்டே இருக்கும்.

குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் வருகை ஏற்படும். பணியிடத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வரும். ஆனாலும் உங்களுடைய திறமையால் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள்.
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புதிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகம் நடந்து அவர்கள் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். நிதானத்தை இழக்கக்கூடாது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகத்தின் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம். வியாபார சந்திப்புகள், தொழில் ரீதியான சந்திப்புகள் என எது இருந்தாலும் அதை தள்ளி வைக்கவேண்டும்.

செவ்வாய்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். பணவரவு சரளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

புதன்-
குழப்பமான மனநிலை தோன்றும். ஆனாலும், எச்சரிக்கை உணர்வு இருப்பதால் கடைசி நேரத்தில் தெளிவாக முடிவெடுப்பீர்கள். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வியாழன்-
எடுத்துக் கொண்ட அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய விசேஷ பேச்சுவார்த்தைகள் நடைபெறும். சுப விசேஷங்கள் முடிவெடுக்கப்படும்.

வெள்ளி-
தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடவேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சனி-
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். வங்கியில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். முக்கியமான நபர்களின் சந்திப்பு ஏற்படுவதால் மன மகிழ்வு ஏற்படும்.

ஞாயிறு-
நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் சாதகமான பதில் கிடைக்கும். நண்பர்கள் மூலம் வியாபார விஷயங்களில் ஆதாயங்கள் கிடைக்கும். கமிஷன் மற்றும் தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத் தகுந்த வருமானம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை வணங்குங்கள். அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
******************

கேட்டை -

எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நீங்கள் விரும்பிய வண்ணமே நிறைவேறும்.

பணவரவு தாராளமாக இருக்கும். ஒரு சில விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். கடும் மன உளைச்சலை கொடுத்துக் கொண்டிருந்த குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். குறிப்பாக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டிருந்த தகராறுகள் நீங்கும்.

சகோதரர்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக பிரச்சினையைத் தீர்க்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதன் பாதிப்பு தெரியாது. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

வியாபாரிகள் புதிய கிளைகளை ஆரம்பித்தல், வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவது போன்ற செயல்களில் இறங்கி வெற்றி காண்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
திட்டமிட்ட காரியங்களிலும் திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். தொழில் - வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும்.

செவ்வாய்-
பணவரவு சரளமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
தாமதப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் இன்று சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சிறிய அளவிலான சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும். பெண்களுக்கு முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று தீர்வதற்கு வழி கிடைக்கும்.

வியாழன்-
வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதற்கான முயற்சிகளில் இன்று இறங்குவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வாகன மாற்றுச் சிந்தனை ஏற்படும். மனதில் கடந்த சில நாட்களாக இருந்த குழப்பங்கள் இன்று முடிவுக்கு வரும்.

வெள்ளி-
எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி-
பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும். நண்பர்களிடமும் அக்கம்பக்கத்தினருடனும் கவனமாக இருக்கவேண்டும். பேசுகின்ற வார்த்தைகளில் எச்சரிக்கை உணர்வு தேவை.

ஞாயிறு-
சொத்துகள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் இன்று உறுதியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு செய்யுங்கள். வாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். பிரச்சினைகள் தீரும்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்