- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
ரோகிணி -
நன்மைகள் அதிகமாக ஏற்படும் வாரம்.
இருந்தாலும் சற்று நிதானத்தோடும் பொறுமையோடும் செயல்படுங்கள். ஆதாயம் தரும் விஷயங்கள் எதுவாயினும் பொறுமையாகக் கையாண்டால் வெற்றி நிச்சயம். சொத்து தொடர்பான விஷயங்கள் இப்போது சாதகமாக இருக்கும்.
பாகப்பிரிவினைகளில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். பணவரவு தாமதமாக இருந்தாலும் சரியான நேரத்தில் கிடைக்கும். வாழ்க்கைத் துணையிடம் தேவையற்ற வாக்குவாதங்கள், வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.
இல்லத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய பொறுப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
தொழிலில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். பெண்களின் தேவைகள் பூர்த்தியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கலைஞர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் -
பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.
செவ்வாய் -
எண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறுகின்ற நாள். செயலில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த பணவரவு முழுமையாக கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள்.
புதன் -
சுபா விசேஷ பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து திருமணத் தேதி குறிக்கப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும்.
வியாழன் -
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செல்லுங்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். மாற்றுக் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.
வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். கடன் தொடர்பான விஷயங்கள் சுமுகமாகத் தீரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சனி-
ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.
ஞாயிறு -
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபார பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்தைத் தரும். நீண்ட நாளாக முடியாமல் இருந்த பிரச்சனை ஒன்று இன்றைக்கு முடிவுக்கு வரும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும். தேவைகள் பூர்த்தியாகும்.
**********
மிருகசீரிடம் -
எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சகோதரர்களுடன் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.
அலுவலகத்தில் தாமதப்பட்டுக் கொண்டிருந்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தரகு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் கமிஷன் வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு இனி மருத்துவச் செலவு தேவைப்படாது. மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.
இந்த வாரம் -
திங்கள் -
எதிர்பார்த்த நன்மைகளும், எதிர்பாராத நன்மைகளும் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் பேச்சுவார்த்தைகள் முடிவாகும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். அதிக நன்மை தரக்கூடிய நாள். தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
செவ்வாய் -
நல்ல பலன்கள் நடைபெறும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
புதன் -
அலுவலகத்தில் அடுத்தவர் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பாக முக்கியமான நபர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவீர்கள். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வேலை தொடர்பான தகவல் கிடைக்கும்.
வியாழன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்பட்டு ஆதாயம் கிடைக்கும்.
வெள்ளி -
தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஒப்பந்தங்கள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். வாழ்க்கைத் துணையிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள்.
சனி-
வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாகவே இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வேண்டிய உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சிறிய அளவிலான செலவுகள் ஏற்பட்டாலும் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும்.
ஞாயிறு -
வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். முக்கியமான நபரை சந்திப்பதால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வருமானம் இருமடங்காக இருக்கும்.எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சாதகமாகவே இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் லாபகரமாக முடிவடையும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவருக்கு செவ்வரளி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.
*******************
திருவாதிரை -
நன்மைகள் நடைபெறும் வாரம் . தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
சொத்து தொடர்பான விஷயங்கள் சுமுகமாகப் பேசி முடிவு எடுப்பீர்கள். சகோதரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் பெருமளவில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
வியாபாரம் சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வியாபாரத்தில் மேலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்துச் சேர்க்கை ஏற்படும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.
திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். இரண்டாவது குழந்தைக்காக எதிர்பார்த்தவர்களுக்கு இப்பொழுது இரண்டாவது குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் -
வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தினருக்காக முக்கியமான செலவுகளை செய்வீர்கள்.
செவ்வாய் -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகனப் பழுது, வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கவனமாகப் பழகவேண்டும்.
புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும். தேவைகள் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தையும் சுமுகமாக இருக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். திருமணத் தேதி முடிவாகும்.
வியாழன் -
அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் சற்று தள்ளிப் போகலாம்..சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக தீரும். பெண்களுக்கு சுப விசேஷங்கள் முடிவாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பாக நல்ல தகவல் உறுதியாகும்.
சனி-
திடீர் செலவுகள் ஏற்படும். மனதில் தேவையில்லாத குழப்பம் உண்டாகும். அமைதியாக இருப்பது நல்லது. ஆலயங்களுக்குச் சென்று வருவது மன அமைதி தரும்.
ஞாயிறு -
வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.சுபகாரிய விஷயங்களுக்காக எடுக்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ நடராஜ சுவாமியை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
****************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago